மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

அரசுடைமையாகும் ஜிஎஸ்டி நெட்வொர்க்!

அரசுடைமையாகும் ஜிஎஸ்டி நெட்வொர்க்!

ஜிஎஸ்டி வரி முறையின் தொழில்நுட்ப முதுகெலும்பாக விளங்கும் ஜிஎஸ்டி நெட்வொர்க்கை அரசுடைமையாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனத்தை அரசுடைமையாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்பு பராமரிப்பு குறித்த பணிகளை ஜிஎஸ்டி நெட்வொர்க் கவனித்து வருகிறது. இந்த நிறுவனம் 2013ஆம் ஆண்டில் ஒரு தனியார் நிறுவனமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமைக்கப்பட்டது.

மே மாதத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி நெட்வொர்க்கை முழுமையாக அரசுடைமையாக்குவதற்கும், அந்நிறுவனத்தின் 50 விழுக்காட்டுப் பங்குகளை மத்திய அரசின் கையிலும், மீதமுள்ள 50 விழுக்காட்டுப் பங்குகளை மாநில அரசுகளின் கையிலும் வழங்குவதற்கான முன்மொழிதலுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது. தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனத்தின் 49 விழுக்காட்டுப் பங்குகள் மத்திய அரசிடமும், மீதமுள்ள 51 விழுக்காட்டுப் பங்குகள் ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, என்.எஸ்.இ. ஸ்ட்ரேட்டஜிக் இன்வெஸ்ட்மெண்ட் கோ, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபினான்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களிடமும் உள்ளன.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon