மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

நடிகர் சூர்யாவும் கருந்துளையும்!

உங்க பள்ளியின் ஒரு நிகழ்சிக்கு நடிகர் சூர்யா வர்றார்னு வைங்க. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நிறைய பேர் உங்க பள்ளிக்கு வந்துட்டாங்க. ஒரே கூட்டம். நீங்க கூட்டத்தோட கடைசியில நிக்கிறீங்கன்னு வைங்க. எல்லாரும் மறச்சுக்கிட்டாங்க. உங்களுக்கு மேடையே தெரியல. எல்லாரும் சூர்யாவோட வருகைக்காகக் காத்திருக்காங்க.

இப்போ கூட்டத்தோட கடைசியில இருக்க உங்களுக்கு, முன்னாடி இருக்க மேடைக்கு சூரியா வந்துட்டாரா இல்லையான்னு எப்படி தெரியும்?

ஒண்ணு, மேடையில இருக்கிறவங்க மைக்ல அறிவிக்கணும். இல்லைன்னா, முன்னாடி இருக்குறவங்க கரகோஷம் எழுப்பினாலோ, இல்ல மேடைக்குப் பக்கத்துல திடீர்னு எதாவது சலசலப்பு ஏற்பட்டு எல்லாரும் கைதட்டினாலோ சூர்யா வந்துட்டார்னு தெரிஞ்சுக்கலாம். சரிதானே குட்டீஸ்?

இப்போ நம்ம கேள்விக்கு வருவோம். கண்ணுக்குத் தெரியாத கருந்துளைகளை நாம எப்படி கண்டுபிடிக்கிறது?

அது கண்ணுக்குத் தெரியாது என்பதால், நம்மால நிச்சயமா நேரா பார்த்துக் கண்டுபிடிக்க முடியாது. ஆனா, கூட்டத்துல கடைசில நின்னுகிட்டு சூர்யாவைக் கண்டுபிடிச்சோம் இல்லையா? அதேமாதிரி கருந்துளைகளைக் கண்டுபிடிக்கலாம்.

கருந்துளைகள் தனக்கு அருகில் எந்தப் பொருள் வந்தாலும் ஈர்த்துக்கொள்ளும்னு பார்த்தோம் இல்லையா குட்டீஸ்? அப்போ கருந்துளைகள் இருக்கும் இடத்துக்கு வரும் பொருட்கள் காணாமல் போகும்தானே?

இதை வேற மாதிரி சொல்லிப் பாருங்க... எந்த இடத்தில் எல்லாம் திடீர் திடீர்னு பொருட்கள் காணாம போகுதோ அங்கெல்லாம் கருந்துளைகள் இருக்குன்னு அர்த்தம். விண்வெளியில் எங்கெல்லாம் பொருட்கள் மாயமாகி சலசலப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் கருந்துளைகள் இருக்கும்னு சொல்லலாம்ல? அப்போ கருந்துளைகளைக் கண்டுபிடிச்சாச்சு தானே?

இப்படிதான் கருந்துளைகளோட இருப்பை கண்டுபிடிக்க முடிஞ்சது. இது எவ்ளோ சிம்பிளான வழி!

ஒரு வழியில் முயற்சி பண்ணி ஒரு பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கலைனா, மாத்தி யோசிக்கணும். மாத்தி யோசிங்க குட்டீஸ்..! எல்லாத்துக்கும் தீர்வு கிடைச்சிரும்.

சரி, ஒரு கருந்துளை இவ்வளவு பொருட்களையும் தனக்குள்ள வெச்சுக்கிட்டு என்னதான் செய்யும்..?

- நரேஷ்

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon