மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

அனிருத் வாழ்த்திய தர்புகா சிவா படம்!

அனிருத் வாழ்த்திய தர்புகா சிவா படம்!

அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராம் இயக்கிய ‘தரமணி’ வாயிலாகக் கவனம் பெற்ற வசந்த் ரவி தற்போது நடித்து வரும் படம் ராக்கி. புஷ்கர் - காயத்ரியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகிறார். தனது இசையால் சமீபமாக பரவலான இளைஞர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ள தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டவர்களும் இதில் பாடல் எழுதியுள்ளதால் இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள பாடல்களுக்கு இப்போதே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதை இசையமைப்பாளரான அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெளியிட்டதோடு, "தரமணி படத்தில் அறிமுகமான அன்பு நண்பர் வசந்த் ரவி தற்போது தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். இதன் ட்ரெய்லர் பார்த்து ரசித்தேன். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்" எனும் தொனியிலும் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon