மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

இந்தியா: தயாராகும் மேற்கிந்தியத் தீவுகள்!

இந்தியா: தயாராகும் மேற்கிந்தியத் தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் இந்திய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளர் அந்த அணியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "எங்கள் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் இந்திய மண்ணில் சிறப்பாக ஆடி நிச்சயம் பெரிய ஸ்கோர் செய்வர். அதற்கான எல்லாத் தகுதிகளும் அவர்களுக்கு இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி அதிக ஸ்கோர் அடித்தால், அதை வைத்து எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியை தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், "இந்தியாவை வெல்வது எளிதான ஒன்றல்ல. அது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக விளங்குகிறது. எனவே இந்த தொடரில் சிறப்பாக ஆடி அவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார். ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தத் தொடரில் பங்கேற்கவிருக்கிறது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon