மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

லஞ்சம்: தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை!

லஞ்சம்: தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை!

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தாசில்தாராக இருந்தவர் சவுந்திரராஜன். 2004ஆம் ஆண்டு இறால் பண்ணையை மூடுவதற்காக, கருப்பையா என்பவரிடம் ரூ.4,000 லஞ்சம் வாங்கியதாக, இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கிராம உதவியாளர் நாகரத்தினமும் கைது செய்யப்பட்டார். சுமார் 12 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில், ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 27) இறுதித் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கு நீதிபதி சிவப்பிரகாசம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாசில்தார் சவுந்திரராஜன் லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கும் கிராம உதவியாளர் நாகரத்தினத்திற்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதாக உத்தரவிட்டார் நீதிபதி சிவப்பிரகாசம்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon