மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

பிளாஸ்டிக் இல்லா நியாயவிலைக் கடை!

பிளாஸ்டிக் இல்லா நியாயவிலைக் கடை!

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துணிப்பைகளை அறிமுகப்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அனைத்து மண்டல இணைபதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துணிப்பைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு பிளாஸ்டிக் பைகளை விடுத்து, துணிப்பைகளை மட்டுமே கொண்டுவர குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய துணிப்பைகளில், தங்கள் மண்டலக் கூட்டுறவு நிறுவனங்கள், நிறுவனத் தயாரிப்புகள் குறித்து விளம்பர வாசகங்கள் இடம்பெறலாம் என்றும், பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு மண்டலத்திற்கும் தேவையான துணிப்பைகளை, மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்களில் இயங்கும் 98 மகளிர் தையல் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவோ அல்லது நன்கொடையாகவோ பெறுவதற்குத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத நியாயவிலைக் கடைகளாக விரைவில் மாற வேண்டும்” என்று அந்த சுற்றிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon