மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

செல்ல நாய்க்காகச் சின்னத் தியாகம்!

செல்ல நாய்க்காகச் சின்னத் தியாகம்!

நடிகை தமன்னா அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டு சைவ உணவுக்கு மாறிவிட்டதாக அறிவித்துள்ளார். அவருடைய ஐந்து வயது செல்ல வளர்ப்பு பிராணியான பெப்பிள் என்ற நாய் உடல் நலம் குன்றியதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது குறித்து ஐஏஎன்எஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “நான் அசைவ பிரியையாக இருந்தேன். எப்போதும் மீன் மற்றும் இறைச்சிகளை சாப்பிடுவது வழக்கம். எனது வீட்டில் பெப்பிள் என்ற செல்ல நாய் இருக்கிறது. கடந்த மாதம் அதற்கு உடல் நலமில்லாமல் போனது. அது எங்கள் செல்ல வளர்ப்புப் பிராணி மட்டுமல்ல, எங்கள் குடும்ப உறுப்பினர்.

அதன் மீது எனக்குப் பாசம் அதிகம். உடல்நலமில்லாமல் அதைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. என் நேரத்துக்குரிய ஒன்றுக்காக எதையாவது விட்டுவிடலாம் என நினைத்தேன். சிறு தியாகம் செய்யத் தீர்மானித்தேன். அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். இது சவாலானதும்கூட. நீங்கள் என்ன உண்கிறீர்கள் என்பதைவிட நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் தமன்னா தற்போது தமிழில் ‘கண்ணே கலைமானே’ படத்தை முடித்துவிட்டு, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ மற்றும் குயின் ரீமேக்காக உருவாகி வரும் ‘தட் இஸ் மகாலட்சுமி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பிரபு தேவாவுடன் ‘தேவி-2’ விலும் நடிக்க இருக்கிறார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon