மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

வங்கித் துறைக்குப் பயனளிக்கும் ஆதார்!

வங்கித் துறைக்குப் பயனளிக்கும் ஆதார்!

வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கு அரசின் ஆதார் திட்டம் ஒரு சிறந்த வசதியாக உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய வங்கிக் கணக்குகளை எளிதாகத் தொடங்குவதற்கு ஆதார் திட்டம் சிறப்பான சேவை வழங்கி வருவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியின் தலைவரான ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். ஆதார் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியானது என்று செப்டம்பர் 26ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள சமயத்தில் எஸ்பிஐ தலைவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 26ஆம் தேதியன்று ரஜ்னிஷ் குமார் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். சேவை அடிப்படையில், ஆதார் திட்டம் ஒரு சிறந்த வசதி என நான் நம்புகிறேன். ஆதார் அட்டையை வைத்து வங்கிக் கணக்கு தொடங்குவது மிக எளிதாக உள்ளது.

இன்றளவில், எங்களது டிஜிட்டல் தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஆதார் அட்டையை வைத்து வங்கிக் கணக்கை துவங்க விரும்பினால் ஐந்து நிமிடங்களில் துவங்கிவிடலாம். உடனடியாகவே அந்த வங்கிக் கணக்கு செயல்படத் துவங்கிவிடும். 80 முதல் 85 விழுக்காடு வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி வங்கி கணக்குகளுக்கு இனி ஆதார் கட்டாயமாக இருக்காது. ஆனால் வாடிக்கையாளர்கள் விரும்பினால் தாமாக முன்வந்து ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்” என்று கூறினார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon