மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

எஸ்.டி.ஆரா, மணி சாரா: அப்டேட் குமாரு

எஸ்.டி.ஆரா, மணி சாரா: அப்டேட் குமாரு

தளபதி, நாயகன் எடுத்தப்பகூட மணிரத்னம் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுருக்க மாட்டாரு. படம் என்னமோ ஹவுஸ் ஃபுல்லாத்தான் போகுது. ஆனால் இப்ப அதுதான் பிரச்சினையே. வர்ற கூட்டம் சிம்புவால வருதா இல்ல மணிரத்னத்தால வருதான்னு பட்டிமன்றமே நடத்திகிட்டு இருக்காங்க. இந்த சண்டையில விஜய்சேதுபதி ரசிகர்கள் முழிச்சுகிட்டு இருக்காங்க. இந்த கேப்புல அருண் விஜய் போஸ்டர்தான் தியேட்டர் ஃபுல்லா ஒட்டிவச்சிருக்காங்க. மணிரத்னம் ஒரு டிரெண்டு செட்டர்ன்னு சொல்வாங்க இப்ப தான் அதை நேர்ல பார்க்குறேன். படத்துல கதை இருக்கோ இல்லையோ எதிரும் புதிருமா ஒரு நாலு நடிகர்களை செலக்ட் பண்ணி இறக்கிட்டா போதும். அவங்க ரசிகர்கள் அதுல யார் தலைவர் கெத்துன்னு சொல்லி சண்டை போட்டே படத்தை ஓட்டிருவாங்க. மணி சார் மணி சார் தான். படத்துக்கு அப்புறம் போகலாம் இப்ப அப்டேட்டை பாருங்க.

@HAJAMYDEENNKS

நானும் அதிமுக அரசை விமர்சித்துள்ளேன்.. என் நாக்கை அறுப்பாங்களா? மத்திய அமைச்சர் பொன்னார்

உங்களுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பாங்க ஜி !

@Kozhiyaar

தமிழகத்தில் சிபிஐ என்னவோ கபடி ரெய்டு போற மாதிரி உதார் விட்டுட்டு ஒவ்வொர் வீடா போய்ட்டு புஸ்ஸாகி திரும்ப வந்துடுது!!!

@ShivaP_Offl

வீட்ல மனைவியோட “டார்ச்சர்” தாங்க முடியாமல் ஆபீஸுக்கு போறதும்,

ஆபீஸ்ல பாஸோட “டார்ச்சர்” தாங்க முடியாமல் வீட்டுக்கு வருவதிலேயுமே பாதி வாழ்க்கை முடிஞ்சு போயிடுது

@pandiprakash

மரத்தில் குடியிருந்த பறவை கூட்டங்களெல்லாம் மின் கம்பத்தில் குடியேறுகின்றன மனிதன் கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறியதை போல..

@amuduarattai

செய்தி: கவர்னரை சந்தித்த எச்.ராஜா, தமிழக அரசு மீது புகார்.

பஞ்ச்: ஆதாரத்தை காட்டினால் நடவடிக்கை எடுப்போம்ன்னு சொன்னது ஒரு குத்தமாயா..!?

@shivaas_twitz

அம்மாவின் அன்பு 'யூசர் ஐ.டி'...

அப்பாவின் அன்பு 'பாஸ்வர்ட்'..!

@vickytalkz

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்புக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.நா விருது அறிவிப்பு...!

இவங்களே குப்பைய கீழ போட்டுட்டு சுத்தம் செய்வாங்களாம் அதுக்கு விருது குடுப்பாங்களாம் என்னய்யா நியாயம்

@Kozhiyaar

அநேகமாக சர்கார் பாட்டு டப்பிங் செலவை குறைப்பதற்காகவே எழுதப்பட்டிருக்கும்!!!

@Muthaiy

குழந்தைகள் தீண்டாத

பொருட்கள் மோட்சம்

அடைவதில்லை.

@sultan_Twitz

மிரட்டும் வகையில் அமைச்சர் துரைக்கண்ணு பேசவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர் பேசும் போது வாயை குவிக்கையிலே பின்னாடி இருந்து யாரோ டப்பிங் பண்ணிட்டாங்க அதானே!!

@shivaas_twitz

எப்போ பாரு... செல்போனை நோண்டுறது தான் பொழப்பு... செல்போன் சர்வீஸ் கடைக்காரருக்கு..!

@Thaadikkaran

முன்னெல்லாம் SMS வந்தா, ஆர்வமா யார் அனுப்பி இருக்காங்கன்னு பார்ப்பாங்க. இப்பெல்லாம் SMS வந்தா ரம்மி ஆடி பணம் வெல்வீர், லோன் அப்ரூவ், இதே நம்பர் போஸ்ட்பெய்டுல இருக்குன்னுதான் வந்திருக்குன்னு கரெக்ட்டா தெரிஞ்சு வச்சிருக்காங்க..!

@sendil

யாரா இருந்தாலும் சரி பாசத்தை அளவாத்தான் வைக்கணும் இல்லனா வழுக்கி விட்டுரும் !!

@vandavaalam*

தமிழ்நாட்டு சிலபஸ் பூரா ஏஆர் ரகுமானை வச்சு ம்யூசிக் போட வைக்கணும். அப்பதான் பிடிக்குற வரை மறுபடியும் மறுபடியும் கேட்டு எல்லாரும் நிறைய மார்க் வாங்குவாங்க.

@Thaadikkaran

குட்கா முறைகேடு விவகாரம்: கைதான அதிகாரி சிவக்குமாருக்கு 3 நாள் சிபிஐ காவல்

-நாளைக்கு நெஞ்சு வலி, ஹாஸ்பிடல்ல அட்மிட்டுன்னு நியூஸ் வரும். டாட்..!

@sultan_Twitz

சமூக வலைதளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த நபர்கள் மீது வழக்கு பதிவு - செய்தி

எப்பேர்பட்ட மனுஷன் அவரு அவரை போய் விமர்சிக்க எப்படி தான் மனசு வருதோ தெரில!!

@Vicky_stirring

நானும் அதிமுக அரசை விமர்சித்துள்ளேன்..என் நாக்கை அறுப்பாங்களா? மத்திய அமைச்சர் பொன்னார்

அட விடுங்க தலைவரே அவங்க நாக்கு அறுத்தா பின்னாடியே வருமானவரித்துறையை அனுப்பி மூக்கை அறுத்திற மாட்டிங்க நீங்க...!

@amuduarattai

செய்தி: கருணாஸ் எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து - அமைச்சர் ஜெயக்குமார்.

பஞ்ச்: பாகிஸ்தான் தீவிரவாதிகளாலா..!?

@thoatta

விஜய் சேதுபதி ரசிகர்கள் பாவம், மாசம் 2 தடவை பேனர் கட்டனும். ஆனா சிம்பு ரசிகருகளுக்கு லக்கு, கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து, 5 வருசத்துக்கு ஒரு பேனர் வச்சா போதும்

@mekalapugazh

அனேகமாக..அதிமுகவின் அடுத்த போராட்டம்.. திமுகவிலிருந்து எம்ஜியாரை நீக்கியதற்காகக் கலைஞரை எதிர்த்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தப்படுமோ.

-லாக் ஆஃப்

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon