மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

நாம் நினைக்கும் பாபா நம்மை நினைத்தால்...

 நாம்  நினைக்கும் பாபா நம்மை  நினைத்தால்...

இப்போது கிராமங்களில் இருப்பவர்களானாலும், நகரங்களில் இருப்பவர்கள் ஆனாலும் சொந்த வீடு கட்டுவது என்பது ஒரு பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் நகரங்களில் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள் என்றால் அது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.

ஜெயலலிதாவின் பசுமை வீடு, மோடியின் வீடு என்றெல்லாம் அரசுத் திட்டங்கள் மூலமாக வீடு கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிற நிலையிலும் வீடு கட்டுவது என்பது இன்றைக்கு பெரிய விஷயம்தான். அதனால்தான் வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்று வாழ்வின் முக்கிய கடமைகளில் முதலாவதாக வீட்டை வைத்தார்கள் முன்னோர்.

சாய்பாபா காலத்திலும் ஒரு சிஷ்யர் வீடு கட்டக் கஷ்டப்பட்டிருக்கிறார். அவருக்கு பாபாவே வீடுகட்ட உதவியிருக்கிறார் என்ற தகவல் ஆச்சரியம்தானே...

பாபாவுக்கு மிகவும் இஷ்டமான சிஷ்யர் புரந்தரே. தினந்தோறும் பாபாவை வந்து பார்ப்பார். பாபாவோடு பேசிக் கொண்டிருப்பார், பாபாவும் அவருக்கு பல உபதேசங்கள் செய்வார். அப்படி ஒரு உபதேசத் திருநாளில்தான் பாபா கேட்டார் புரந்தரேவிடம், ’‘ஏனப்பா... உனக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா?’’

பாபா கேட்டதற்கு காரணம் இருக்கிறது. அந்த காலத்தில் சொந்த வீடு இல்லை என்றால் வாடகை வீட்டில் இருப்பார்கள் என்ற அர்த்தம் கிடையாது. இருந்தால் சொந்த வீடு இல்லையேல் சாலைதான் வீடு.

அப்போது புரந்தரே சொன்னார்... ‘’பாபா என்னை கிண்டல் செய்கிறீர்களா? நான் பார்க்கிற வேலைக்கு எனக்கு சோறு கிடைப்பதே பெரிதாக இருக்கிறது. இதில் நான் எங்கிருந்து வீடு கட்டுவது” என்று கேட்டார்.

அதற்கு பாபா சிரித்துக் கொண்டே, "நீ வீட்டு மனை ஒன்று வாங்கி, அதில் பங்களா கட்டு" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

இதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் புரந்தரே பாபாவிடம் மேலும் கோபித்துக்கொண்டு போய்விட்டார்.

இதைப் பார்த்த மற்ற சீடர்கள், ‘’பாபா ஏன் இப்படி அவனிடம் விளையாடுகிறீர்கள். பாவம் அவன் வாழ்க்கை நடத்துவதே பெரும் சிரமமாக இருக்கும் நிலையில் வீடு கட்டச் சொல்கிறீர்களே?” என்று கேட்டனர்.

ஆனால் பாபாவோ, ‘ஏனய்யா எல்லாரும் அவநம்பிக்கையாய் இருக்கிறீர்கள்? அவன் வீடு கட்டுவான் பாருங்கள்” என்றார் உறுதியாய்.

பாபா சொன்னபடியே புரந்தரேவின் எண்ணத்தில் வீடு கட்டும் திட்டம் உதித்தது.

பாபாவை பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்பது என்பது வேறு... பாபா நம்மைப் பற்றி நினைப்பது வேறு! நாமெல்லாம் எப்போதும் பாபாவை நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான்... ஒரு நொடிக்கும் குறைவான நேரம் கூட பாபா நம்மைப் பற்றி நினைத்தால் போதும்! அதற்கு சாட்சிதான் புரந்தரே!

அக்கரைப்பட்டியில் ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் எழுப்பியிருக்கும் சாய்பாபா ஆலயத்தில் தினந்தோறும் சாய்பாபாவை பார்த்துக் கொண்டிருங்கள். ஒரு நாள் ஒரு நிமிடம் ஒரு தேவ நொடியில் சாய்பாபா நம்மைப் பார்ப்பார். அப்போது நம் வாழ்க்கை அழகான மாற்றங்களையும் அற்புதமான முன்னேற்றங்களையும் சந்திக்கும்.

புரந்தரே வீடு கட்டினாரா? தொடர்ந்து பார்ப்போம்!

(பாபா பரவசம் தொடரும்)

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
[email protected]
http://akkaraipattisaibaba.com/

விளம்பர பகுதி

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon