மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

நிறுவனங்களின் லாபம் குறையும்!

 நிறுவனங்களின் லாபம் குறையும்!

இந்த ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் வருவாய் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரிசில் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணிகளால் இந்திய நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சென்ற ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டை விட இந்த ஆண்டில் இரண்டு மடங்கு கூடுதலான வருவாயை இந்திய நிறுவனங்கள் ஈட்டும். சில்லறை விற்பனை, வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறை, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஜிஎஸ்டியின் தாக்கம் குறைவாக இருந்ததால் இத்துறை சார்ந்த நிறுவனங்களின் வருவாயில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. அதேபோல, ஸ்டீல், அலுமினியம், நிலக்கரி, சிமெண்ட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக விற்பனையைப் பதிவு செய்திருந்ததால் வருவாய் உயர்வைச் சந்திக்கும்.

விமானப் போக்குவரத்துத் துறையில் பயணிகள் வருகையில் 16 சதவிகித வளர்ச்சி இருக்கும். ஆட்டோமொபைல் விற்பனை 4 சதவிகிதம் உயரும். எனினும் கச்சா எண்ணெய் விலையேற்றம் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் கச்சா எண்ணெய்யின் விலை 45 சதவிகிதம் வரையில் உயர்ந்திருந்தது. அதேபோல, இக்காலாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பும் 9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருந்தது. மேலும், உள்நாட்டில் நிலக்கரி, ஸ்டீல், அலுமினியம் ஆகிய பொருட்களின் விலையும் 12 முதல் 17 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. இது நிறுவனங்களின் லாபத்தைக் குறைக்கக்கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon