மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அபிராமி

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அபிராமி

இரண்டு குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அபிராமி மற்றும் சுந்தரம் ஆகியோரின் நீதிமன்றக் காவலை, வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமி, கடந்த மாதம் 30ஆம் தேதியன்று தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். பிரியாணி கடையில் வேலை செய்துவந்த சுந்தரம் என்பவருடன் கொண்ட தொடர்பினால், அவர் இக்குற்றத்தைச் செய்ததாகத் தகவல் வெளியானது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நாகர்கோயிலில் அபிராமி தலைமறைவானார். இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், உடனடியாக அவர்களைப் பிடித்துப் புழல் சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில், இன்று (செப்டம்பர் 28) அபிராமி, சுந்தரம் ஆகிய இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, இருவரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon