மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

நில அபகரிப்பு: சிக்கும் அமைச்சர்!

நில அபகரிப்பு: சிக்கும் அமைச்சர்!

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்து தன் நிலத்தை அபகரிக்க முயல்வதாக 70 வயது மூதாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பசந்திரம் கிராமத்தில் 70 வயது மூதாட்டி அஞ்சனா ரெட்டிக்கு சொந்தமாக 32.87 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அபகரிக்க முயல்வதாக நிலத்தின் உரிமையாளரான அஞ்சனா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, போலி ஆவணங்கள் மூலம் தன் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும், இந்த நில விவகாரம் தொடர்பாக ஓசூர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தன் அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் அவர் உறவினர் பெயருக்கு நிலத்தின் பட்டாவை மாற்றியுள்ளர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்த நிலத்தை வேறு பெயரில் பட்டா பதிய தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று (செப்டம்பர் 28) விசாரித்த நீதிபதி மகாதேவன், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் எனக்கூறி வழக்கை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon