மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

நாவுக்குச் சுவை, உடலுக்கு ஆரோக்கியம்!

நாவுக்குச் சுவை, உடலுக்கு ஆரோக்கியம்!

தினப் பெட்டகம் – 10 (28.09.2018)

வெங்காயம் இல்லாத சமையல் மிக மிகக் குறைவுதான். வெங்காயம், உணவிற்கு ருசி சேர்ப்பதோடு, ஆரோக்கியமும்கூட. வெங்காயம் பற்றிய ருசிகரமான தகவல்கள்:

1. உலகின் மிகப் பழைமையான காய்கறிகளுள் வெங்காயமும் ஒன்று. பண்டைய எகிப்தில், அவற்றின் நேர்த்தியான வட்ட வடிவம் காரணமாக, மரணமில்லா வாழ்க்கை அல்லது நித்திய ஜீவிதத்தின் அடையாளமாகக் காணப்பட்டது. இதனாலேயே, ஒருவரின் உடலை அடக்கம் செய்யும்போது, அதோடு வெங்காயத்தையும் வைத்து அடக்கம் செய்திருக்கிறார்கள்.

2. உலகில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வெங்காயம், மஞ்சள் நிற வெங்காயம். விளைவிக்கப்படும் வெங்காயத்தில் 75% மஞ்சள் வெங்காயம்.

3. வெங்காயங்கள் பல வகைகளில் விளைகின்றன. மஞ்சள் வெங்காயம், வெள்ளை வெங்காயம், பழுப்பு வெங்காயம், சின்ன வெங்காயம், சிவப்பு வெங்காயம் என.

4. 7000 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உணவுகளில் ஒன்றாக இருக்கிறது வெங்காயம்.

5. பண்டைய காலங்களில், வெங்காயம் பணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வாடகையாகவும், பண்டமாற்று முறையிலும் வெங்காயங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. பரிசாகக்கூட வெங்காயங்களை வழங்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

6. உலகில் அதிகமான வெங்காயத்தை உற்பத்தி செய்யும் நாடு, சீனா.

7. வெங்காயம் நாய்களின் உடலுக்கு ஒவ்வாது. அவற்றின் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களைத் தாக்கி, ரத்த சோகை ஏற்படுத்திவிடும்.

8. பழைய காலத்தில், வெங்காயத்தின் தோல் தடிமனாக இருந்தால், வரப்போகும் குளிர்காலம் கடுமையானதாக இருக்குமென்று சொல்வார்களாம்.

9. உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் வெங்காயம் ஆறாம் இடத்தில் இருக்கிறது.

10. வெங்காயத்திற்கு antiseptic properties அதிகமாக இருக்கிறது. முன்பு, போர்களில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தாக வெங்காயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

- ஆஸிஃபா

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon