மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

பாடப் புத்தகங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு!

பாடப் புத்தகங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு!

ஆறாம், ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம் இணைக்கப்படவுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (செப்டம்பர் 27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் நிறுவனப் பங்களிப்போடு கையேடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் என்கிற கணக்கில், 320 பள்ளிகளுக்குக் கையேடுகள் வழங்கப்படவுள்ளது. அந்தக் கையேட்டையும் வெளியிட்டார். ஆறாம், ஒன்பதாம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவப் பாடப் புத்தகங்களில் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அமைச்சர் செங்கோட்டையன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon