மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

சிறையை உருவாக்கிய வெற்றிமாறன் டீம்!

சிறையை உருவாக்கிய வெற்றிமாறன் டீம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று (செப்டம்பர் 27) வெளியாகியுள்ளது.

வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டு 80களின் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வெளியான டீசரும், பாடல்களும் வரவேற்பு பெற்றுள்ளன. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைச்சாலை ஒன்றில் நடப்பதால் படக்குழு சிறைச்சாலையையே உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தினர். அந்தச் சிறைச்சாலையை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதை தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோவில் காணலாம்.

டீசரில் அசல் சிறைச்சாலையாகப் பார்த்த காட்சிகள் எவ்வளவு பேரின் கடின உழைப்பால் உருவாகியுள்ளது என்பதை இந்த வீடியோ மூலம் உணர முடிகிறது. அப்போது விற்பனைக்கு வந்த சிகரெட் பாக்கெட்டுகள், பற்பசைகள், சிறைச்சாலையில் இருந்த துப்பாக்கிகள் என அனைத்தையும் தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர். கலை இயக்குநர் ஜாக்கியும் அவரது குழுவும் இதில் பணியாற்றியுள்ளனர். வீடியோவின் பின்னணியில் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று ஒலிக்கிறது.

“கல்லு உடைக்கிறேன் ஜெயிலிலே

கண்ணு முழிக்கிறேன் இரவிலே

தப்பிச்சி போகவும் வழியில்ல

எப்ப கிடைக்கும் விடுதலை”

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் பாடலின் வரிகளை எழுதிப் பாடியுள்ளார் அறிவு. சமுத்திரகனி, கிஷோர், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

வடசென்னை மேக்கிங் வீடியோ

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon