மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 செப் 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

உலகத்துக்கு உடம்புக்கு ஒரே விதிதான்!

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது எனும் கேள்விக்குப் பல்வேறு தியரிகள் இருக்கு குட்டீஸ். அதுல எல்லாரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தியரி ‘பெரு வெடிப்புக் கொள்கை’ (Big bang theory). சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த தியரியைத் தவறுன்னு ஆதாரத்துடன் நிரூபிக்க முடியல. இந்தக் கொள்கையின் கணிப்புகள் தவறுன்னு இனி வருங்காலத்துல நிரூபிக்கப்பட்டாலும், இந்தக் கொள்கையோட சாரம் உண்மை. அதை யாராலையும் மறுக்க முடியாது.

இந்தக் கொள்கை என்ன சொல்லுதுன்னா, இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன்னே சிறிய முட்டை வடிவலான கோளமா இருந்துச்சு. அதில் கட்டுக்கடங்காத ஆற்றல் இருந்தது. அது சூழலில் இருக்கும் ஆற்றலைத் தொடர்ந்து உள்ளிழுத்துட்டே வந்துச்சு. ஒருகட்டத்துல அதிகமான ஆற்றலைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் வெடித்து சிதறி, ஆற்றலை சின்ன சின்ன துகள்களா (Energy packets) வெளிபடுத்துச்சு. அந்தத் துகள்கள் ஒவ்வொண்ணும் கோளங்களாக வடிவம் எடுத்ததுனு... அப்படியே போகும்.

“ஆற்றலைத் தக்கவைக்க முடியாமல் வெடித்துச் சிதறும்” நிகழ்வுதான் - பெரு வெடிப்புக் கொள்கையோட ஆணிவேர்.

இதுல நாம தெரிஞ்சுக்க வேண்டியது, தொடர் அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆற்றல், வெடித்துச் சிதறித் தன்னை விடுவித்துக்கொள்ளும்.

இதேதான் குட்டீஸ் கருந்துளைகள்லேயும் நடக்குது. தொடர்ந்து பொருட்களை, ஆற்றலை, தன் ஒளியைக்கூட வெளியே அனுப்பாமல் ஈர்த்து வைக்கும் கருந்துளை, ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறும். அப்படிச் சிதறும்போது சேமித்து வைத்த ஆற்றலைச் சின்னச் சின்ன ஆற்றல் துகள்களாக (Energy packets) வெளிப்படுத்தும்.

இந்த விதி மிக அடிப்படையானது நண்பர்களே. மூடியிருக்கும் ஒரு தொட்டியில் அளவுக்கு அதிகமா நீரைச் செலுத்திக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்துல அதுல விரிசல் விழுந்து வெடிச்சிடும். பெரிய அணைகள்லேயும் இப்படித்தான் நடக்கும், நம்ம உடம்புலேயும் இப்படித்தான் நடக்கும்.

கோபத்தை அடக்கிக்கொண்டே இருந்தால் அது வெடிச்சிரும்னு பேச்சு வாக்குல சொல்றாங்க இல்லையா? அதுவும் இதே மாதிரிதான்.

நம்மைச் சுத்தி நடக்குற சின்னச் சின்ன விஷயங்களை ஆராய்ந்து கேள்வி கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாலே, பிரபஞ்ச ரகசியம் பிடிபடும் குட்டீஸ்.

இயங்கவே முடியாத நிலையில் இருந்த ஒருத்தருக்கு (ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்), பிரபஞ்ச ரகசியம் பிடிப்பட்டதுன்னா, அது ஒண்ணும் சாதாரண விஷயமில்லை. ஒரு நெருப்பு துகள் ஏன் மேல் நோக்கி எரியுதுன்னு அவர் தனக்குத் தானே கேட்ட கேள்விதான் பெருவெடிப்புக் கொள்கையின் வேறு வடிவத்தை வெளிப்படுத்தியது.

எல்லார்கிட்ட இருந்தும் எல்லாவற்றிலிருந்தும் கத்துக்கணும். கத்துக்கறதுக்கு மட்டும் என்னிக்குமே தடை போடக் கூடாது!

- நரேஷ்

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

வெள்ளி 28 செப் 2018