மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

சிறப்புக் கட்டுரை: சுற்றுலாவில் இன்றைய இளைஞர்களின் ஆர்வம்!

சிறப்புக் கட்டுரை: சுற்றுலாவில் இன்றைய இளைஞர்களின் ஆர்வம்!

ரீம் கொகர்

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆகாஷ் மல்கோத்ரா தனியாகவே இந்தோனேசியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். கொமோடோ டிராகன்களைக் கண்டுகளித்தது முதல் ஆழ்கடல் நீச்சல் வரை பல ரக அனுபவங்களை அவர் தனது பயணத்தில் பெற்றுள்ளார். கணவாய் மீன்களுடன் அவர் நீச்சலடித்துள்ளார். உயிர்ப்புடன் இருக்கும் மவுன்ட் பண்டுர் எரிமலையில் மலையேறியுள்ளார். எதிர்பாராத அனுபவங்களைப் பயணங்கள் வழங்குகின்றன. எனினும், அனைத்து அனுபவங்களுமே விரும்பத்தக்கவையாக இல்லையென்பதை ஆகாஷ் புரிந்துகொண்டுள்ளார். பாலியில் அவர் இருந்தபோது அருகே இருந்த லோம்பக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குப்பைகள் அனைவரின் மீதும் விழத்தொடங்கியதால் ஆகாஷ் மல்கோத்ரா உள்பட அனைவரும் ஷாப்பிங் மாலை விட்டு பயத்தில் வெளியேறினர்.

சுற்றுலா விரும்பியான ஆகாஷுக்கு 26 வயதாகிறது. இவரது இந்தோனேசியப் பயணம் ஒன்றும் வருடாந்திரப் பயணம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே ஆகாஷ் மல்கோத்ரா இரு மாதங்கள் இந்தியாவிலும், நான்கு மாதங்கள் உலகத்தைச் சுற்றியும் வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அவர் 34 நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். தனது நிதி ஆதாரங்களில் பெரும்பங்கை அவர் சுற்றுலாப் பயணங்களுக்கே செலவழித்துள்ளார். மகிழ்ச்சியை வேட்டையாடி வருவதாக அவர் கூறுகிறார். “வெளிநாடுகளைச் சுற்றுவது, சொந்தத் தொழிலை நடத்துவது, மற்றவர்களுக்கு வழிகாட்டுவதன் வாயிலாக எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. இவையனைத்தும் எனது வாழ்க்கை முறையில் உள்ளது. அதனால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது” என்கிறார் ஆகாஷ்.

பெரும்பாலான இந்திய இளைஞர்கள் ஆகாஷைப் போல சுற்றுலாப் பயணங்களுக்குச் செலவிடுவதில்லை என்றாலும், பயணங்களுக்கு நேரம் ஒதுக்கி, பணம் செலவிடுவதற்கான விருப்பமும் ஆசையும் அவர்களுக்கு இல்லாமல் இல்லை. தங்களது பெற்றோரைப்போல கார்களிலும், வீடுகளிலும் முதலீடு செய்வதற்கு அவர்கள் விரும்புவதில்லை. இந்திய இளைஞர்களுக்கு வாடகை வீடும், பகிர்வுப் பயணங்களும் சிறந்தவையாகத் தெரிகின்றன. பொருட்களைவிட அனுபவங்களைச் சேகரிப்பதிலேயே பெரும் மதிப்பு இருப்பதாக இளைஞர்கள் கூறுகின்றனர்.

ஸ்கைஸ்கேனர் இந்தியா நிறுவனம் நடத்திய மில்லெனியல் டிராவல் சர்வே 2017 ஆய்வில், 18 முதல் 35 வயதான இளைஞர்களில் 62 விழுக்காட்டினர் ஆண்டுக்கு இரண்டு முதல் ஐந்து முறை சுற்றுலா செல்வதாகத் தெரியவந்துள்ளது. 10 விழுக்காட்டினர் ஆண்டுக்கு ஆறு முதல் பத்து முறை உள்நாட்டு மற்றும் நீண்டகால வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதாகத் தெரிகிறது. பலரும் தங்களது பணி நேரம் மற்றும் செலவினங்களை ஒழுங்குபடுத்தி சுற்றுலா செல்வதற்கு எந்தத் தடையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், இவர்களில் ஒருசாரார் கடன் வாங்கித் தங்களது சுற்றுலாத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர். ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது சாத்தியமில்லை என்பதால், பல நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தியாவில் தனிநபர் மற்றும் சில்லறைக் கடன்களை வழங்கும் தொழிலில் இறங்கியுள்ளன.

க்பெரா, ஃபின்சி, ருபிக் போன்ற நிறுவனங்கள் சுற்றுலாப் பயணங்களுக்காகக் கடன் வழங்குவதற்குத் தனிப் பிரிவை உருவாக்கியுள்ளன. இந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடன் வெளியீட்டில் 12 முதல் 20 விழுக்காடு சுற்றுலாப் பயணங்களுக்காக வழங்கப்படுகின்றன. க்பெரா நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தகவல்களின்படி சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்வதற்காகக் கடந்த ஆண்டில் விண்ணப்பித்த 1,700 நபர்களில் 728 நபர்கள் 28 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.

சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ள நேரம் தேவை என்பதாலேயே ஆகாஷ் மல்கோத்ரா ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை தேடாமல் சொந்தமாகத் தொழில் தொடங்கியுள்ளார். டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் ஆலோசனை நிறுவனத்தின் உரிமையாளரான இவர், சில மாதங்களுக்கு ஒருமுறை இந்தியாவுக்குத் திரும்பி, தனது வாடிக்கையாளர்களைச் சந்தித்து தொழிலை மேம்படுத்துகிறார். மீதமுள்ள நேரங்களில் அவர் பயணித்துக்கொண்டே இருப்பதால் தொலைதூரங்களிலிருந்தே பணிபுரிகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்முனைவோரான டிம் ஃபெரிஸின் தி 4 ஹார் வொர்க் வீக் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டதாக ஆகாஷ் கூறுகிறார். கார்ப்பரேட் வேலைகளின் சங்கிலிகளிலிருந்து விடுவித்து ஒருவர் தனது கனவு வாழ்வை வாழ்வதற்கு இந்தப் புத்தகம் ஊக்கமளிப்பதாக அவர் கூறுகிறார். டிம் ஃபெரிஸின் அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றாவிட்டாலும்கூட, ஒரு நாளுக்கு நான்கு மணிநேர பணி செய்வது என்பதை ஆகாஷ் பின்பற்றி வருகிறார். புதிய இடங்களைச் சுற்றிவிட்டு அதுகுறித்த விவரங்களைத் தனது இணையதளத்திலும், இன்ஸ்டகிராம் கணக்கிலும் அப்டேட் செய்கிறார். பயணங்களுக்கு அவர் எவ்வாறு நிதி ஒதுக்குகிறார் என்பது குறித்தும் தனது இணையதளத்தில் குறிப்புகளை வழங்கியுள்ளார். மேலும், பலதரப்புகளைச் சேர்ந்த 12 இளைஞர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றுவதற்கு ஆகாஷ் வழிகாட்டுகிறார்.

கடன் பெறுவதற்கான முன்னணி ஐந்து காரணங்களில் சுற்றுலாவும் ஒன்றாக இருப்பதாக க்பெரா நிறுவனத்தின் துணை நிறுவனரான அனுபவ் ஜெயின் கூறுகிறார். அவரது நிறுவனத்தில் சுற்றுலாக் கடன்களின் விகிதம் 2017ஆம் ஆண்டில் 6 விழுக்காட்டிலிருந்து தற்போது 16 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அனுபவ் பேசுகையில், “இதுவரையில் 50 கோடி ரூபாயைக் கடனாக வழங்கியுள்ளோம். இதில் சுற்றுலாக்களுக்கான கடன்களின் பங்கு 16 விழுக்காடாகும்” என்று கூறினார்.

ஃபேர்சென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான ராஜத் காந்தி பேசுகையில், 6 விழுக்காடு தனிநபர் கடன்கள் தேனிலவு உள்படத் திருமணங்கள் மற்றும் சுற்றுலாக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்.

டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் ஆலோசகரான தீக்‌ஷா ஜலானி (27 வயது) பேசுகையில், “பயணத்தின்போதுதான் இடங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் நான் அறிகிறேன்” என்று கூறுகிறார். பெரும்பாலான இளைஞர்கள் தொழில்முனைவோராகவும், ஆலோசகர்களாகவும் இருப்பதால் சுற்றுலாப் பயணத் திட்டமிடல் எளிதாக இருப்பதாக தீக்‌ஷா ஜலானி கருதுகிறார். “வழக்கத்துக்கு மாறான தொழில் செய்வதால் ஆண்டுக்குக் குறிப்பிட்ட நாட்களைச் சுற்றுலாவுக்காக ஒதுக்க முடிகிறது. ஆகையால், நிறைய சுற்றுலா வாய்ப்புகள் கிடைக்கின்றன” என்று கூறுகிறார் தீக்‌ஷா.

நன்றி: ஸ்க்ரால்

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: பணக்காரர்களின் அரசு!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon