மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 செப் 2018

பெற்றோரை இழந்த பெண்ணுக்குப் பணி ஆணை!

பெற்றோரை இழந்த பெண்ணுக்குப் பணி ஆணை!

பெற்றோரை இழந்து தவிக்கும் 19 வயதான பெண்ணுக்குச் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை வழங்கினார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன் - வனிதா. இவர்களுக்கு ஆனந்தி (19), அபி (17), மோகன் (16) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். அப்பகுதியில் சத்துணவு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார் புனிதா. இவர், 2014ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரது கணவர் வெங்கடேசன், சிறுநீரகக் கோளாறு காரணமாக ஓராண்டுக்கு முன்பு இறந்தார்.

பெற்றோரின் இறப்புக்குப் பின்னர், மூன்று குழந்தைகளையும் பாட்டி ராணி பராமரிப்பு வந்தார். கடந்த 13ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார் ஆனந்தி.

“எனது தாயார் பணிக்காலத்தில் இறந்துவிட்டார். தற்போது, நாங்கள் மூவரும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறோம். நான் கூலி வேலைக்குச் சென்று வருகிறேன். அதனால், கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும்” என்று ஆனந்தி அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த 24ஆம் தேதியன்று, ராணியும் மரணமடைந்துவிட்டார். யாரும் இல்லாத நிலையில் தாங்கள் இருப்பதாக, மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுத்தார் ஆனந்தி. இதையடுத்து ஆட்சியர் கந்தசாமி, “19 வயதானவருக்கு அரசுப் பணி வழங்க எந்தவித முகாந்தரமும் இல்லை. தமிழக அரசு தலைமைச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என நம்பிக்கை அளித்தார் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

5 நிமிட வாசிப்பு

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடல்!

3 நிமிட வாசிப்பு

பிரசித்தி பெற்ற கோயில்கள்  மூடல்!

வெள்ளி 28 செப் 2018