மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

காஜலையடுத்து கவிதா: ஜெயம் ரவி-24 அப்டேட்!

காஜலையடுத்து கவிதா: ஜெயம் ரவி-24 அப்டேட்!

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார் கன்னட நடிகை கவிதா.

'அப்பா லாக்' (App(a) Lock) எனும் குறும்படத்தை இயக்கிக் கவனம்பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தனது 24ஆவது படத்தை நடித்துவருகிறார் நடிகர் ஜெயம் ரவி.

அவருடன் காஜல் அகர்வால் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் அல்லது ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

செப்டம்பர் 20ஆம் தேதி இந்தப் படத்தின் தொடக்க விழா நடந்த நிலையில் தற்போது கன்னட நடிகையான கவிதா ரதேஷ்யம் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். அந்த வகையில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுடன் அவர் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்றுவருகிறது.

இந்தப் படத்தை முடித்த கையோடு தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன்-2வில் இணையவுள்ளார் ஜெயம் ரவி.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon