மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

விவசாயத்தைக் குறிவைக்கும் வால்மார்ட்!

விவசாயத்தைக் குறிவைக்கும் வால்மார்ட்!

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.180 கோடியை முதலீடு செய்ய வால்மார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வால்மார்ட் நிறுவனம் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வாழ்வாதார நலனுக்காக ரூ.180 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக வால்மார்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்து உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் அருகாமையிலுள்ள காசிம்பூர் கிராமத்தில் நடைபெற்ற உள்ளூர் விவசாயிகள் கூட்டத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான ஜுடித் மெக்கென்னா பேசுகையில், “இந்தியாவின் விநியோக அமைப்பையும் தாண்டி வால்மார்ட் நிறுவனம் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 25 மில்லியன் டாலரை (ரூ.180 கோடி) வால்மார்ட் முதலீடு செய்யும்” என்று தெரிவித்தார்.

வால்மார்ட் இந்தியாவின் தலைமைச் செயலதிகாரியான கிரிஷ் ஐயர், வால்மார்ட் இந்தியாவின் தலைமை கார்பரேட் விவகார அதிகாரியான ரஜ்னீஷ் குமார், ஃபிளிப்கார்ட் குழுமத்தின் தலைமைச் செயலதிகாரியான பின்னி பன்சால் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அங்கிருந்த காய்கறிகள் பண்ணையை ஜுடித் மெக்கென்னா சுற்றிப்பார்த்தார். உத்தரப் பிரதேசத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அந்நிறுவனத்தின் உயர்நிலைப் பிரதிநிதிகள் குழு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon