மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

ஆபாச உடை சர்ச்சை: சமந்தா பதில்!

ஆபாச உடை சர்ச்சை: சமந்தா பதில்!

இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்றிற்கு வந்த எதிர்மறையான கருத்துகளுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா.

திருமணத்திற்குப் பின் நடிப்பைக் கைவிட்ட நடிகைகள் மத்தியில் சமந்தா தன் வேகத்தைக் குறைத்துக்கொள்ளாமல் பல படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'சீமராஜா', 'யூ டர்ன்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ‘யூ டர்ன்’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு கணவர் நாக சைத்தன்யாவுடன் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறார் சமந்தா.

சுற்றுலாவின் போது கணவர் எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் சமந்தா. அதில் பலரும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். “திருமணமான பெண் இப்படி உடையணியலாமா”, “அக்கினேனி குடும்பத்து மருமகளா இப்படி”, என்று தெரிவித்திருந்தார்கள். அப்புகைப்படங்களை வைத்து மீம்களும் பரவத் தொடங்கின.

இதற்கு சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அவருடைய பதிவில், “என்னைத் திருமணத்திற்குப் பிறகு இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று கூறும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டு அடுத்த படத்தில் நடுவிரல் உயர்த்திக் காட்டும் படமொன்றைப் பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்தப் பதிவிற்கு திரையுலகினர் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon