மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

குறைந்துகொண்டே வரும் ஆர்தடாக்ஸ்!

குறைந்துகொண்டே வரும் ஆர்தடாக்ஸ்!

தேயிலை ரகங்களில் ஒன்றான ஆர்தடாக்ஸ் தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சக செயலாளர் கூறியுள்ளார்.

இந்திய தேயிலை சங்கத்தின் 135ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்திய தேயிலை சங்கத்தின் தலைவர் அஷாம் மோனம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், “சர்வதேச தேயிலை ஏற்றுமதியில் ஆர்தடாக்ஸ் ரக தேயிலைக்கு 50 விழுக்காடு தேவை இருக்கிறது. தேயிலை ரகங்களில் ஒன்றான ஆர்தடாக்ஸ் ரக தேயிலை உற்பத்தியை அதிகரித்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்கலாம். பல்வேறு உலக நாடுகளில் ஆர்தடாக்ஸ் ரக தேயிலை அதிகளவில் தேவை இருக்கிறது. ஆர்தடாக்ஸ் ரக தேயிலை உற்பத்தி இந்தியாவில் 1950ஆம் ஆண்டில் 150 மில்லியன் கிலோவாக இருந்தது. ஆனால் இப்போது 120 மில்லியன் கிலோவாகக் குறைந்துவிட்டது. எனவே, உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை அளிப்பதும் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் கை கொடுப்பதும் மிகவும் அவசியமானதாகும்” என்றார்.

வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சக செயலாளரான அனுப் வாதவன் பேசுகையில், “ஆர்தடாக்ஸ் தேயிலைத் துறைக்கு என்ன தேவை என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இத்துறை எதிர்கொள்ளும் சவால்களைப் போக்க நிதி அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகம் செய்வதிலும் சவால்கள் உள்ளன. இருப்பினும் உற்பத்திப் பிரிவில்தான் அடிப்படையான சவால்கள் உள்ளன. உற்பத்திப் பிரிவில் ஊழியர் பற்றாக்குறையும் நிலவுகிறது” என்றார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon