மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

விருந்தோம்பல்: சுற்றுலாத் துறை வளரும் பின்னணி!

விருந்தோம்பல்: சுற்றுலாத் துறை வளரும் பின்னணி!

இந்தியாவின் சுற்றுலாத் துறையின் விருந்தோம்பல் சேவைகளை மேம்படுத்த முக்கியத்துவம் தர வேண்டும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தேசியத் தலைநகர் டெல்லியில் ’தேசிய சுற்றுலா விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சரான கே.ஜே.அல்போன்ஸ் கலந்துகொண்டு விருதுகளை வழங்கியதோடு, சுற்றுலாத் துறைக்கான ‘இன்கிரெடிபிள் இந்தியா’ மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பின்னர் அவர் பேசுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

சுற்றுலாத் துறையின் வாயிலாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதோடு, இந்தியாவின் அந்நியச் செலாவணி வருவாயில் முக்கியப் பங்கை சுற்றுலாத் துறை கொண்டுள்ளது. எனவே சுற்றுலாவின் பயன்களை முழுமையாகப் பெறும் வகையில் அரசுடன் இத்துறை கைகோர்த்துச் செயல்பட வேண்டும். உலகின் இதர நாடுகளை விட சுற்றுலாவில் இந்தியா சிறந்த விளங்குவதே சிறப்பான விருந்தோம்பல் சேவையால்தான். எனவே விருந்தோம்பல் சேவைகளை மேம்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்தியாவில் பயணிக்கும் எவருக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்றார்.

அடுத்த ஆண்டில் ஐ.நா. உலக சுற்றுலா அமைப்புக்கான அதிகாரப்பூர்வ உலக சுற்றுலா தினம் இந்தியாவில் நடைபெறும் எனவும் அல்போன்ஸ் தெரிவித்தார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon