மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

இருட்டில் வலம்வரும் தன்ஷிகா

இருட்டில் வலம்வரும் தன்ஷிகா

சுந்தர் சி நடிக்கும் புதிய படத்தில் நடிகை தன்ஷிகாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி, இயக்குநர் வி.இஸட் துரை இயக்கும் ஹாரர் படமான இருட்டு படத்தில் நடித்துவருகிறார். மாறுபட்ட ஹாரர் படமாக உருவாவதாகச் சொல்லப்பட்டும் இதில் க்ரிஷ் இசையமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டைன்மென்ட் என்னும் நிறுவனம் தயாரிக்கிறது.

சரண் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் இருவர் என்னும் படத்தில் நடித்த சாக்‌ஷி செளத்ரி இதில் நடித்துவருகிறார். இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர். இந்நிலையில் இதில் நடிக்கும் நடிகை தன்ஷிகாவின் கதாபாத்திரத்தை வெளிக்காட்டும் போஸ்டர் வெளியிடப்பட்டு இணையத்தில் தற்போது கவனம் பெற்றுவருகிறது.

வாலு ஜடை மற்றும் சமுத்திரக்கனி இயக்கும் கிட்ணா ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள நடிகை தன்ஷிகா, கபாலிக்குப் பிறகு ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெறவில்லை. இதனால் அடுத்து வெளியாகவுள்ள இந்தப் படங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon