மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

காந்தி ஜெயந்தி: மது விற்றால் கடும் நடவடிக்கை!

காந்தி ஜெயந்தி: மது விற்றால் கடும் நடவடிக்கை!

சென்னையில் காந்தி ஜெயந்தியன்று மதுபானம் விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் சண்முக சுந்தரம் நேற்று (செப்டம்பர் 27) செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டார். “அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2ஆம் தேதியன்று புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட கலால் துறை துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் துறை சட்ட விதிகள் 1970ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon