மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

பாகிஸ்தான் வேகத்துக்கு வந்த சோகம்!

பாகிஸ்தான் வேகத்துக்கு வந்த சோகம்!

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்துக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணியின் பலமே அந்த அணியின் வேகப்பந்துவீச்சுப் படைதான். ஆனால் இந்தத் தொடரில் பாகிஸ்தானின் வேகங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக அணியின் முக்கிய பந்துவீச்சாளரான முகமது ஆமிர் இந்தத் தொடரில் 1 விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதனையடுத்து தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று (செப்டம்பர் 27) அறிவிக்கப்பட்டது. இதில் முகமது ஆமிர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது ஆமிர். ஆனால் அந்தத் தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் 100க்கும் அதிகமான சராசரியைக் கொண்டு வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தியிருப்பதே இவரது நீக்கத்திற்கு காரணமாகக் கருதப்படுகிறது. சூதாட்ட சர்ச்சைக்கு பிறகு 2016ஆம் ஆண்டு சர்வதேச அணிக்குத் திரும்பிய முகமது ஆமிர், அதன்பிறகு தற்போது முதல் முறையாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்

அசார் அலி, ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அஸாம், அசாத் ஷபிக், ஹரிஸ் சோஹெய்ல், உஸ்மான் சலாஹுதீன், சர்ப்ராஸ் அஹமது (கேப்டன்), யாசிர் ஷா, ஷதாப் கான், பிலால் ஆஸிப், முகமது அப்பாஸ், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், பஹீம் அஸ்ரப், மிர் ஹம்சா, முகமது ரிஸ்வான்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon