மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

பேரிடர் வரி: குழு அமைப்பு!

பேரிடர் வரி: குழு அமைப்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, நிவாரண பணிகளுக்காக ஜிஎஸ்டி வரிமீது 10 சதவீத செஸ் வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்க 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 30ஆவது கூட்டம் இன்று(செப்டம்பர் 28) நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் அனைத்து மாநில பிரதிநிதிகளிடம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்துரையாடினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் நிவாரணத்துக்கு உதவ கேரள மாநில ஜிஎஸ்டி வரிமீது 10 சதவீத செஸ் வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரளா கோரியது.

இது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கேரளாவின் கோரிக்கைக்கு தமிழகம் ஆதரவு தெரிவித்தது. அதேநேரத்தில் இத்தகைய செஸ் வரியை உள்ளூர் வர்த்தகத்தின் மீது மட்டுமே விதிக்க வேண்டும் எனவும் மாநிலங்களிடையேயான வர்த்தகத்தின் மீது செஸ் விரி விதிக்கப்பட்டால் பிற மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக மீன் வளம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

இதேபோல், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீதான வரியினை குறைக்க வேண்டும் மற்றும் விலக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

கூட்டம் முடிந்த பின்னர் வீடியோ கான்ஃபிரசிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, “கேரளாவின் கோரிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்கு 7 அமைச்சர்கள் அடங்கிய குழு ஏற்படுத்தப்படும். வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பிரதேசம் மற்றும் கடற்கரை மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த குழுவில் இடம்பெறுவார். அவர்களின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon