மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

தம்பிதுரை மட்டும் தனித்து போட்டியிடுவார்!

தம்பிதுரை மட்டும் தனித்து போட்டியிடுவார்!வெற்றிநடை போடும் தமிழகம்

“மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவார்” என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் இன்று (செப்டம்பர் 28) தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை மேற்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் என தம்பிதுரை கூறியுள்ளாரே?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தம்பிதுரை மட்டும் தனித்து போட்டியிடுவார் என்று எண்ணுகிறேன். இதற்கு அதிமுக தான் கவலைப்பட வேண்டும்” என்று பதிலளித்தார்.

“தமிழகத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனையில் இப்போது சிறு துளிதான் வெளிவந்துள்ளது. மாநில அரசு இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும்,“காந்தி கண்ட கனவை மெய்ப்பிக்கும் பிரதமர் மோடி, நேரடியாக தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எனவே தான் தெருக்களை நேரடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பொது மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 6 கோடி கழிவறைகளே அமைக்கப்பட்டிருந்தன. மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன”என்று கூறியவர், சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பாக விசாரித்து வரும் பொன். மாணிக்கவேலுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon