மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 24 ஜன 2021

முதல் காபிக்குத் தயாரான ஜோடி!

முதல் காபிக்குத் தயாரான ஜோடி!வெற்றிநடை போடும் தமிழகம்

காபி வித் கரனின் இந்த சீசனில் முதல் விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளவர்கள் யார் என வெளியிட்டுள்ளார் கரன் ஜோஹர்.

இயக்குநரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான கரன் ஜோஹர் பிரபல இந்தி டிவி நிகழ்ச்சியான காபி வித் கரனின் ஆறாவது சீசனைத் தொகுத்து வழங்கவுள்ளார். அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த சீசனில் யார் யார் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர் என்னும் விவாதம் ரசிகர்களிடையே கடந்த சில நாட்களாகவே நடந்துவந்தது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள முதல் சிறப்பு விருந்தினர்கள் குறித்த விபரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கரன் ஜோஹர். அதன்படி நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் இதில் கலந்துகொள்கிறார்கள்.

இதில் கேட்கப்படும் சில தடாலடி கேள்விகளும், பதில்களும் கடந்த காலங்களில் சில சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளதால் இந்த சீசனுக்கு இப்போதே ரசிகர்கள் தயாராகிவிட்டனர். இந்நிகழ்ச்சி ஸ்டார் வேர்ல்டு டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon