மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

வளர்ச்சிப் பாதையில் கட்டுமானத் துறை!

வளர்ச்சிப் பாதையில் கட்டுமானத் துறை!வெற்றிநடை போடும் தமிழகம்

இந்தியாவின் கட்டுமானத் துறை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இதுகுறித்து கே.பி.எம்.ஜி, நாரெட்கோ மற்றும் ஏ.பி.ஆர்.இ.ஏ. நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘இந்திய கட்டுமானத் துறை தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் இந்திய கட்டுமானத் துறை 650 பில்லியன் டாலரையும், 2028ஆம் ஆண்டுக்குள் 850 பில்லியன் டாலரையும் எட்டும். 2030ஆம் ஆண்டில் இந்திய கட்டுமானத் துறையின் மதிப்பு 1 லட்சம் கோடி டாலரைத் தாண்டும். கட்டுமானத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கட்டுமானத் துறையில் தனியார் பங்கு முதலீடுகள் ஆண்டுக்கு 15 விழுக்காடு வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் 3 பில்லியன் டாலராக முதலீடு உயர்ந்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் இது 100 பில்லியன் டாலரை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது. விற்கப்படாத வீடுகள் அல்லது கட்டடங்கள், கட்டமைக்கும் பணியில் ஏற்படும் தாமதம், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவது போன்றவைதான் இத்துறைக்கான சவாலாக உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon