மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

ராம கோபாலனுக்கு கி.வீரமணி அனுப்பிய பார்சல்!

ராம கோபாலனுக்கு கி.வீரமணி அனுப்பிய பார்சல்!

இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலனுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அசல் மனுதர்மம் என்ற நூலை நேற்று ( செப்டம்பர் 27) பார்சல் அனுப்பியிருக்கிறார்.

ராம கோபாலன் இந்த வார ஆனந்த விகடன் ஏட்டில் பேட்டி அளித்திருந்தார். அது தொடர்பாக ராம கோபாலனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் கி.வீரமணி. அந்தக் கடிதத்தை, “அன்பிற்குரிய திரு. ராம. கோபாலன் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் நலம் விரும்புகிறோம்” என்று தொடங்கியிருக்கும் வீரமணி,

“தங்களது பேட்டி - இன்று வெளிவந்துள்ள ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளியாகியுள்ளது. அதில் பல கருத்துக்களை அவரது கேள்விகளுக்கு விடையாக கூறியிருக்கிறீர்கள்.

‘செங்கோட்டையில் நடைபெற்ற கலவரத்துக்கும் திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்று சொல்கிறீர்களா? என்ற கேள்விக்கு,

‘கண்டிப்பாக... இந்த திராவிடக் கட்சியினரும்தாம் முஸ்லீம்களைத் தூண்டிவிடுகிறார்கள். திராவிடர் கழகத்தினரும், முஸ்லீம்களும் எங்கு அதிகமாக இருக்கிறார்களோ அங்குதான் கலவரம் நடக்கிறது’ என்று சொல்லிவிட்டு அதற்கு ஆதாரம் தரத் தங்களால் இயலாதபோது ‘என்னிடம் எதுவும் இல்லை’ என்று ஒப்புக்கொண்டுள்ளீர் கள். இது எந்த அளவுக்கு உங்கள் தர்மம் - நியாயம்?’’ என்று கேட்டிருக்கிறார் வீரமணி.

தொடர்ந்து அந்த கடிதத்தில், “அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம், தமிழில் வழிபாட்டு உரிமை, ஜாதி மறுப்புத் திருமணம் ஆகிய வற்றை வரவேற்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறியிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி!

மற்றொரு கேள்வி, ‘மனு தர்மம்” சொல்லும் ஜாதிப் பிரிவினையை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?’ என்பதற்கு ‘மனு தர்மத்தில் ஜாதிப்பிரிவினை இருப்பதாக யார் சொன் னார்கள்? அப்படி இருப்பதாகச் சொல்லும் ஒரு புத்தகத்தை எனக்கு வாங்கித் தாருங்களேன்’ என்று தாங்கள் கூறியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

இவ்வளவு காலமுமா மனு தர்மம் படிக்காமலோ அல்லது புரிந்துகொள்ளாமலோ இருந்துள்ளீர்கள்? அதற்காக ‘அசல் மனுதர்மம்’ என்ற திருவைந்திரபுரம் கோமாண்டூர் இளையவில்வி ராமாநுஜாச்சாரியர் எழுதிய நூலைத் தங்களின் பார்வைக்கு இத்துடன் அனுப்பியுள்ளோம். பெற்றுக்கொள்ளவும்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் கி.வீரமணி.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon