மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

விவசாயிகளின் வருமானம் உயருமா?

விவசாயிகளின் வருமானம் உயருமா?

பிரதமரின் வேளாண் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழில் மையங்களை மேம்படுத்தும் திட்டம் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு சார்பாக டெல்லியில் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் வேளாண் உணவு தொடர்பான கருத்தரங்கு செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியை மத்திய வேளாண் துறை அமைச்சரான ராதா மோகன் சிங் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், “விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் வகையில், வேளாண் மற்றும் கடல்சார் பொருட்களைப் பதப்படுத்தும் தொழில் மையங்களை மேம்படுத்தும் பிரதமரின் திட்டம் நவீன உள்கட்டமைப்புடன் செயல்படுத்தப்படும்.

வேளாண் விளைபொருட்களை அவை உற்பத்தியாகும் இடங்களிலிருந்து சில்லறை விற்பனைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வதைத் திறமையாக நிர்வகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்தால் விவசாயிகளின் வருமானம் உயர்வதோடு, நுகர்வோருக்கும் போதிய அளவு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படும். இதன்மூலம் அறுவடை காலத்திலும், அறுவடைக்குப் பின்னரும் பல்வேறு கட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டைக் குறைக்க முடியும்” என்று கூறினார்.

பிரதமரின் இந்த வேளாண் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழில் மையங்களை மேம்படுத்துவதற்கான ‘சம்படா’ திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு வரையில் ரூ.6,000 கோடியை அரசு ஒதுக்குகிறது. இதன்மூலம் 20 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதோடு, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon