மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

மெய்யாலுமே செல்லூரார் சயின்டிஸ்ட் தான்: அப்டேட் குமாரு

மெய்யாலுமே செல்லூரார் சயின்டிஸ்ட் தான்: அப்டேட் குமாரு

முன்னெல்லாம் அமைச்சர்கள் மேல ஏதாவது கேஸ் எதுவும் போனதுன்னா, அரசுக்கு எதுவும் ஆபத்து வந்துடும்னு மக்கள் கவனத்தை திசை திருப்புறதுக்காக புதுசா ஏதாவது பிரச்சினை கிளம்பும், இல்லாட்டி கிளப்புவாங்க. இப்ப வேற யாரும் வேண்டாம் நானே பார்த்துக்கிடுறேன்னு நம்ம செல்லூர் ராஜூ கையைத்தூக்கிருப்பாருன்னு நினைக்கிறேன். ஆமா சார், ஊழல் மேட்டர் நிறைய வருதுன்னு மீம்ஸ் போட டெம்ப்ளேட் எடுத்துவச்சா, செல்லூரார் வந்து எய்ட்ஸ், எய்ம்ஸுன்னு சங்கத்தை களைச்சிட்டு போயிட்டாரு. பிறகென்ன செய்ய ஊழல் பிரச்சினையை பிறகு பார்த்துக்கலாம்னு பசங்க சயின்டிஸ்ட்டுக்கு டெம்ப்ளேட் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கென்னமோ இவர் உண்மையிலேயே சயின்டிஸ்ட்டா தான் இருப்பாருன்னு நினைக்கிறேன். சர்டிபிகேட் அப்புறம் தாரேன் இப்போ அப்டேட்டை பாருங்க.

@kathir_twits

வருடம் ஒருமுறை சந்திப்பவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதும் சந்திப்பில் எடுத்த செல்பி தான் !!

@HAJAMYDEENNKS

ட்ராஃபிக் போலிசை பொறுத்தவரை வாகனம் ஓட்டுபவர்கள் எல்லோரும் கஸ்டமர்களே !

@yugarajesh2

ஸ்டாலின் மீது நேரம் வரும் போது வழக்கு தொடர்வோம் தற்போது மக்கள் பணி செய்ய தான் நேரம் உள்ளது- ஆர்.பி.உதயகுமார்

-மதியம் ஒரு மணிக்கு அன்னத்தில் கை வச்சாலும் வைப்பேனே தவிர, யாருடைய கன்னத்திலும் கை வைக்க மாட்டேன்-மொமண்ட்..!!

@Thaadikkaran

பல பேருடைய காதல் இங்கே குட்கா மாதிரிதான் பதுக்கியே வைத்திருக்கிறார்கள்..!!

@HAJAMYDEENNKS

கமல் கட்சியெல்லாம் அமாவாசைக்குள்ள காணாமல் போய்விடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமாவாசைக்கெல்லாம் நிலாதான் காணாமல் போகும் !

@pandiprakash

எத்தனையோ சிற்றுயிர்களை கொன்று நிலங்களை அழித்து வான் முட்டும் கட்டிடங்கள் கட்டி நகரமென்கிறார்கள்..

@selvaraj851

கடவுள் : என்ன கருவறையில உக்கார வைக்கிறயா சொர்க்கத்துக்கு கூட்டிட்டு ‌போறேன்.

தொழிலதிபர் : நீ மொதல்ல கோணில உக்கார்றயா பாரின் கூட்டிட்டு போறேன்.

@rahimgazali

எங்கள் ஆட்சியில்தான் மதுரைக்கு எயிட்ஸ் வந்தது என்று கூறிக்கொண்டு...

தலைவரே அது எயிம்ஸ்.

@Thaadikkaran

நீ என்னதான் ஆணழகனா இருந்தாலும், குழந்தைக்கு சோறு ஊட்டும் போது அந்த வழியா போனா நீ பூச்சாண்டிதான்..!!

@CreativeTwitz

'அதிகமா வரும்போது மற்றவர்களுக்கு கொடுத்துக்கலாம்' என நினைப்பவர்கள் பெரும்பாலும் கடைசிவரை கொடுக்க முடியாமலே போய்விடும்!

@nandhu_twitts

கூகுள் மேப்ப பாத்தும் சரியான இடத்துக்கு போக முடியலனா..

வண்டிய டீக்கடை, பெட்டிக்கடை, பெரிய ஆலமரம் பக்கமா நிறுத்தி அங்க இருக்கிறவங்க கிட்ட கேட்டாலே, டோர் நம்பர் வரைக்கும் சொல்லிடுவாங்க..!!

வெ. பூபதி

உடல் இளைப்பாற மரநிழல் போதும். மனம் இளைப்பாற அருகாமையில் நம்பிக்கையுள்ள அக்கறையுள்ள இதயம் வேண்டும்!

@nandhu_twitts

ஓடாத வாட்சை கட்டியிருக்க? என்று கேட்டால், ஸ்டைல் என்பார்கள்..

இவர்களெல்லாம் டைம் போறதே தெரியரதில்ல என்று சொல்லும் வகையைச் சார்ந்தவர்கள்..!!

@mohanramko

'இந்த நாட்டை விட்டு போவதை தவிர வேறு வழியில்லை' என்று கடவுள் சிலைகளையும் சொல்ல வைத்துவிட்டார்கள், அரசியல்வாதிகள்

@rahimgazali

ஸ்டாலின் மீது நேரம் வரும்போது வழக்கு தொடர்வோம்; தற்போது மக்கள் பணி செய்யத்தான் நேரம் உள்ளது - அமைச்சர் உதயகுமார்

ஸ்டாலின் மீது நேரம் வரும்போது வழக்கு தொடர்வோம் என்பதைக்கூட நம்பிட்டோம். ஆனால் 'மக்கள் பணி செய்ய நேரம் பத்தலே'ன்னு சொன்னீங்க பாருங்க, அதைத்தான் ஜீரணிக்க முடியல.

@urs_venbaa

ஒரு கோவிலையே மொட்டை போட்டுவிட்டனர் - பொன். மாணிக்கவேல் வேதனை

-கடவுள் வரமாட்டார்ங்கிற தைரியம்

@Surya Xavier

சென்னையிலிருந்து நெல்லைக்கு 600 கிலோ மீட்டர்.

ரயிலில் வர 12 மணி நேரம்.

மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம்.

அதெல்லாம் உங்க வளர்ச்சியின் வெளிப்பாடுன்னே இருந்துட்டு போகட்டும்.

ஆனா அந்த ரயிலுக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்னு தயவு செய்து சொல்லாதீகப்பா.

@kumarfaculty

போலீஸ் கேட்கப்படும் ஆவணங்களை இருப்பவர்கள் பைக் கவரிலிருந்து எடுக்கிறார்கள்.

இல்லாதவர்களுக்கு மணிப்பர்ஸோ மொபைல் போனோ உதவுகிறது...!!!

@rockfortkamal

ஓரினச்சேர்க்கை தப்பில்ல...

கள்ளத்தொடர்பு தப்பில்ல...

கொலைக் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடலாம் தப்பில்ல...

அப்ப எது தான் தப்பு.. ஹெல்மட் போடாதது மட்டும்தான் தப்பு.

@sendil

மத்தியில் ஆள நினைப்பவர்கள் முதல்வர் பழனிசாமி வீட்டின் கதவை தட்டவேண்டிய நிலை ஏற்படும் - ராஜேந்திர பாலாஜி

- சத்தமா தட்ட சொல்லாதீங்க, மோடிக்கு கேட்டுற போகுது!!

@yaar_ni

சமூக வலைதளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த நபர்கள் மீது வழக்கு பதிவு - செய்தி

கலாய்க்க கூடாதுனு குணமா சொல்லணும் ..

வழக்கு பதிவு செய்யக்கூடாது !

-லாக் ஆஃப்

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon