மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பேரணி வழக்கு: டெல்லி முதல்வர் விடுவிப்பு!

பேரணி வழக்கு: டெல்லி முதல்வர் விடுவிப்பு!

அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட 8 பேரை விடுவித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2014 மக்களவை தேர்தலின் போது மும்பையின் மான்குர்ட் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் மீரா சன்யால் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் உள்ளிட்டோரின் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இந்தப் பிரசாரத்தின் பகுதியாக தேர்தல் பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணி தொடர்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, 2014 மார்ச் மாதம் கேஜரிவால், மீரா சன்யால், மேதா பட்கர் உள்ளிட்ட 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 28) விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது பட்கரை தவிர்த்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது தீர்ப்பளித்த நீதிபதி பி.கே. தேஷ்பண்டே, ”இந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிக்கை வழங்க போலீஸ் தவறியுள்ளது. மின்னணு ஆதாரமும் வழங்கப்படவில்லை. குற்றச்சாட்டு பதிவு செய்வதிலும் தாமதம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்” என்று உத்தரவிட்டார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது