மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

அழைப்புத் துண்டிப்பு: அமைச்சர் குற்றச்சாட்டு!

அழைப்புத் துண்டிப்பு: அமைச்சர் குற்றச்சாட்டு!

மொபைல் டவர்களைக் கட்டமைப்பதற்குத் தடையாக இருக்கும் மக்களாலேயே அழைப்புத் துண்டிப்புகள் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.

மொபைல் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் உடல்நலக் கேடுகள் ஏற்படும் என்று அஞ்சி டவர்களைப் பொருத்துவதற்குத் தடையாக இருக்கும் மக்களே அழைப்புத் துண்டிப்புகளுக்குக் காரணம் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். தொலைத் தொடர்பு அமைச்சகத்தால் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து செப்டம்பர் 26ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்துள்ளார். அழைப்புத் துண்டிப்புகள் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதாக மோடி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

செப்டம்பர் 27ஆம் தேதி அமைச்சர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அழைப்புத் துண்டிப்புகளுக்கான தொழில்நுட்பத் தீர்வு குறித்து நாம் ஆராய வேண்டும். மின்காந்தக் கதிர்வீச்சால் எந்தவொரு நோயும் ஏற்படாது என்று நாம் கருத்தரங்குகளை நடத்தினாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், சில நபர்கள் எதிர்த்துக்கொண்டே இருக்கின்றனர். நல்ல இணைப்புக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதி வேண்டுமென்பதை நாம் அனைவரும் அறிவோம். டவர் நிலையங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. எனினும், நல்ல இணைப்பு வேண்டும், ஆனால் டவர்கள் வேண்டாம் எனக் கூறும் சில மக்களும் இருக்கின்றனர்” என்று கூறினார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon