மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

மலேசிய தேர்தலிலும் எம்.ஜி.ஆர்.

மலேசிய தேர்தலிலும் எம்.ஜி.ஆர்.

மறைந்து 31 வருடங்கள் ஆனபோதும் எம்.ஜி.ஆரின் புகழ் தமிழகத்திலும் அவரது செல்வாக்கு தமிழக அரசியலிலும் கொடி கட்டிப் பறக்கிறது. தமிழகம் மட்டுமல்ல, அண்மையில் இலங்கையில் கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் மலேசிய நாட்டில் நடக்கும் தேர்தலில் கூட எம்.ஜி.ஆர். பிரச்சாரத்துக்கு பயன்பட்டு வருகிறார் என்ற செய்தி வியப்பளிக்கிறது.

மலேசியாவின் போர்ட்டிக்சன் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் வேட்பாளராக டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் போட்டியிடுகிறார்.

அன்வர் இப்ராஹிமின் தேர்தல் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் வேடமிட்ட நபர் ஆடிப் பாடினார். அன்வர் இப்ராஹிமும் ‘நான் ஆணையிட்டால்’ எனப் பாடல் பாடி அசத்தியிருந்தார். இதை மலேசிய மக்கள் வெகுவாக ரசித்தனர். ‘எம்.ஜி.ஆர்’ உடன் வந்த நிலையில் இன்று (செப்டம்பர் 29) அன்வர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர்தான் எம்ஜிஆர் வேடத்தில் வலம் வந்தார். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பது எம்ஜிஆருக்கு சாலவும் பொருந்துகிறது. இருக்கும்போது மட்டுமல்ல, மறைந்த பின்னரும் உலகம் சுற்றும் வாலிபன்தான் எம்.ஜி.ஆர்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon