மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சென்னை: உரிமைக்காகப் போராடும் ஊழியர்கள்!

சென்னை: உரிமைக்காகப் போராடும் ஊழியர்கள்!

சென்னையில் வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யமஹா, ஐச்சர் மோட்டார்ஸ் போன்ற மோட்டார் பைக் உற்பத்தி நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஊதிய உயர்வு, சங்கம் அமைப்பதற்கான உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தொழிலாளர் சட்டங்களின்படி நடப்பதற்காகப் பெருமளவிலான ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இந்நிறுவனங்கள் பணியமர்த்திவிட்டு, பல ஆண்டுகள் பணிபுரிந்த பிறகும் அவர்களின் பெயர்களைச் சம்பளப் பட்டியலில் சேர்ப்பதற்கு மறுப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை தற்போது தமிழ்நாட்டைத் தாக்கியுள்ளது. தெற்காசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் பி.எம்.டபுள்யூ, டெய்ம்லர், ஹூண்டாய், ஃபோர்டு, நிசான், ரெனால்ட் போன்ற முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஆலைகள் உள்ளன. தலைநகர் சென்னையில் இந்த ஆலைகளின் எண்ணிக்கை ஏராளம். இதுகுறித்து இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரும், இந்திய வர்த்தக சங்க மையத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவருமான எஸ்.கண்ணன் இந்தியா டுடே ஊடகத்திடம் பேசுகையில்,”குறைவான ஊதியமே எங்களது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவதில்லை. அதோடு, ஊழியர்களுக்கு அடிப்படை மரியாதை கூட மறுக்கப்படுகிறது” என்று கூறினார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon