மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ரஷ்யாவிலும் எதிரொலிக்கும் ரஃபேல்!

ரஷ்யாவிலும் எதிரொலிக்கும் ரஃபேல்!

வரும் அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வருகிறார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டுடனான ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி பாஜக அரசுமீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், ரஷ்யா உடனான இராணுவ ஒப்பந்தங்கள் நிறவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து ஜெனிவாவில் இன்று (செப்டம்பர் 29) செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ராவ், “நாங்கள் இந்தியாவுக்கு விமானங்களை சப்ளை செய்ய ஒப்பந்தம் போட்டோம். ஆனால், அது குறித்து அடுத்தக்கட்டத் தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை. ரஃபேல் விவகாரம் குறித்தான சர்ச்சைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நாட்டின் இறையாண்மைக்கு ஏற்றாற் போல் இந்தியாதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “2015 ஆம் ஆண்டு இந்தியா-ரஷ்யா இடையே ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்தும், என்ன வகையான ஆயுதங்கள் தேவை என்பது குறித்தும் இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து 126 நடுத்தர ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.அந்தோணி முன்னெடுத்தார். 2015 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சியும் ராணுவ உபகரணங்களை வாங்க ரஷ்யாவிடம் ஒரு ஒப்பந்தம் போட்டது. அக்டோபர், 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது 39,000 கோடி ரூபாய் செலவில் எஸ்-400 ராணுவ விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்நிலையில், இது குறித்த தெளிவான முடிவுகள் புதினின் இந்திய வருகைக்குப் பிறகு தெரியவ்ரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon