மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 செப் 2018

வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு அதிகம்?

வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு அதிகம்?

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையானது, வழக்கத்தைவிட 12 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று (செப்டம்பர் 29) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். அப்போது, வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும் என்று தெரிவித்தார். “தென்மேற்குப் பருவமழையானது இன்னும் முடியாததால், வடகிழக்குப் பருவமழை தொடங்கவில்லை. இந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழை 12 சதவிகிதம் அதிகமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, “வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்குச் சுழற்சியானது இலங்கை முதல் தெற்கு கர்நாடகா கடல் வரை நீடிக்கிறது. இதன் காரணமாக, பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமானது முதல் பெருமழை வரை பெய்யும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார். கன்னியாகுமரி, கேரளாவின் தென்பகுதி, லட்சத்தீவு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அவர் கூறினார். தமிழக மீனவர்கள் நாளை மாலை வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மைய இயக்குநர்அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

சனி 29 செப் 2018