மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: வன்முறை... தீர்வுதான் என்ன?

சிறப்புக் கட்டுரை: வன்முறை... தீர்வுதான் என்ன?

சத்குரு ஜகி வாசுதேவ்

இப்போதைய உலக சூழ்நிலையில், எங்கு பார்த்தாலும் கலவரம், சண்டை, அடிதடி, வன்முறை என்று இருக்க, அதற்கான ஆதரவு குரல்கள் ஆங்காங்கே எழுந்து கொண்டிருக்க, ஒரு சிலர் அவைகளை தடுக்கவும் பல வழிகளில் முயற்சிக்கிறோம். சரி அதற்கான தீர்வுதான் என்ன?... தொடர்ந்து படியுங்கள்.

இந்த உலகில், வன்முறையை, வாயளவில் மட்டுமே பயன்படுத்தும்படியான ஒரு அமைப்பை நிறுவ நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வாய்ச் சண்டையைத்தான், நாம் "ஜனநாயகம்" என்று சொல்லிக் கொள்கிறோம். இதில் வெளிப்படும் வார்த்தைகளால் புண்பட வேண்டாம், ஏனென்றால் இந்த வாய்ப்போரை எடுத்துவிட்டால், பிறகு அது மற்போராக மாறிவிடும்.

எனவே ஒவ்வொருவருக்கும் வாய்ச் சண்டையில் பயிற்சியளிப்பது முக்கியமாக இருக்கிறது. கோபம், அதிருப்தி மற்றும் விரக்தியை வெளிப்படுத்த வாய்ச்சண்டையில் போதிய திறமை இல்லையென்றால், பிறகு மக்கள் தங்கள் கைகளைத்தான் பயன்படுத்துவார்கள். ஒவ்வொருவரும் சதாஷிவா என்னும் நிலைக்கு வரும்வரை, மனிதர்களிடம், வாய்ச்சண்டை என்பது ஒரு கலையாக இருக்கும். வாய்ச்சண்டை என்பது ஒரு சிறந்த தீர்வு அல்ல, ஆனால் இடைக்காலத் தீர்வாக இருக்கும்.

நாடாளுமன்றம் மற்றும் ஐ.நா. சபை விவாதங்களில் வாய்ச்சண்டைத் திறமையை பயன்படுத்தாமல் தற்போதுள்ள வன்முறைக் கருவிகளை மட்டும் நீங்கள் பயன்படுத்தியிருந்தால் - ஓ! இந்த உலகத்தைப் பலமுறை நீங்கள் அழித்திருப்பீர்கள். ஆனால் அப்படி நடப்பதில்லை. ஏனென்றால் நவீன சமூகம் வாய்ச்சண்டையைக் கற்றுக்கொண்டுவிட்டது; ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதென்றால்கூட அதை நாகரிகமாகச் செய்துகொள்ள முடியும்.

தற்போதெல்லாம் அப்படி நேருக்கு நேராகச் சொல்ல உங்களுக்குத் துணிவு இல்லையென்றால், பேச விரும்புவதை நீங்கள் வலைப்பதிவு செய்துவிட முடியும். உங்கள் வீட்டில் இருந்துகொண்டே எவ்வளவு மோசமான விஷயங்களை வேண்டுமானாலும் நீங்கள் சொல்ல முடியும். அது உண்மையானதா, அதை மற்றவர்கள் படிக்கப் போகிறார்களா, அது அர்த்தமுள்ளதா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லே. வெறுமனே எதையாவது ஒன்றைச் சொல்லலாம்.

நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்திக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறைந்தபட்சம் நீங்கள் பேசவோ, எழுதவோ அல்லது வாக்குவாதமோ செய்யும்போது அடுத்தவர் மேல் குண்டெறிய மாட்டீர்கள். உங்கள் கருத்தைப் புரியவைக்க முடியாததால்தான் நீங்கள் குண்டு வீசுகிறீர்கள்.

இந்த குண்டு வீச்சுக்கள் எல்லாம், குறைந்தபட்சம் இந்தியாவில், ஒருவர் தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் முயற்சிதான். "குண்டு வெடித்து 16 பேர் இறந்துவிட்டனர், 100 பேர் படுகாயம் அடைந்தனர்" என்று செய்திகள் வரும்போது - அதில் ஒரு அறிவிப்பு வெளிப்படுகிறது என்று பொருள். "நாம் 16 பேரை மட்டும்தானே கொன்றோம் - காரிலோ, ஒரு சைக்கிளிலோ குண்டு வைத்ததற்குப் பதிலாக, ஒரு பெரிய டிரக்கில் குண்டை வைத்திருந்தால், 2000 பேர் இறந்திருப்பார்கள் தெரியுமா?" என்றெல்லாம் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. தாங்கள் சொல்ல விரும்புவதை வாயளவில் பேச அவர்களுக்கு நாம் கற்றுக் கொடுத்திருந்தால், பிறகு சைக்கிள் குண்டை உபயோகிக்கக்கூடிய அவசியம் அவர்களுக்கு வந்திருக்காது. அவர்கள் எதைச் சொல்ல விரும்பினாலும் அதை எப்படி வேண்டுமானாலும் உளறிக்கொள்ளட்டும். அதற்காக 16 பேரை அவர்கள் கொன்றிருக்கத் தேவை இல்லை.

ஒவ்வொரு சமுதாயமும் எந்த அளவிற்கு சாத்தியமோ, அந்த அளவிற்கு வன்முறையை குறைக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இந்த உலக மனிதர்கள் எல்லோரும் ஞானம் அடைவதற்கான சாத்தியம் வரும் வரை, அந்த நாள் வரும் வரை, இந்த வன்முறையை குறைத்து வைப்பதே சிறந்தது. அந்த நாள் வரும்போது நாம் இந்த முழு உலகத்தையுமே ஞானமடையச் செய்துவிடலாம்.

நான் தோல்வி மனப்பான்மை கொண்டவன் அல்ல, அதே சமயத்தில் அது என் வாழ்நாளிலேயே நடந்துவிடும் என்று நினைக்கும் அளவிற்கு நான் முட்டாளும் அல்ல. ஒரு நூறு மனிதர்கள் மலர்ந்தாலே அற்புதம் என்று நான் நினைக்கிறேன். அதன் பிறகு அவர்களே அந்த எண்ணிக்கையைப் பெருக்கிவிடுவார்கள். நமக்கான வாய்ப்புகள் நன்றாக இருக்கின்றன, உண்மையிலேயே மிக நன்றாக இருக்கின்றன. தற்போது சம்யமா நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது. வன்முறையற்ற மக்களை நாம் நிச்சயமாகவே உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon