மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கிரவுட் ஃபண்டிங்கில் உருவாகும் ‘சில்லாக்கி டும்மா’!

கிரவுட் ஃபண்டிங்கில் உருவாகும்  ‘சில்லாக்கி டும்மா’!

கிரவுட் ஃபண்டிங் முறையில் ‘சில்லாக்கி டும்மா’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள் டீக்கடை சினிமா நிறுவனம்.

தமிழ் திரையுலக சூழலில் வணிக சினிமாவை நோக்கி பலர் பயணித்தாலும், சுயாதீன திரைப்படத்திலும் சிலர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல குறும்படங்களை தயாரித்ததுடன், குறும்பட விழாக்களை நடத்தி வந்த டீக்கடை சினிமா நிறுவனம் முதன் முறையாக சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளது. கிரவுட் பண்டிங் முறையில் அருவி பிலிம் பேக்டரியுடன் இணைந்து, ‘சில்லாக்கி டும்மா’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் அட்டு படத்தில் நடித்த ரிஷி ரித்விக் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் அபிஷேக், சரவண சக்தி, தீனா நடிக்கிறார்கள். நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. கந்தசாமி மாறன் இப்படத்தை இயக்குகிறார். ஒரு நாளில் மூன்று கேங்க்ஸ்டர்களிடையே நடக்கும் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் ஏவிஎம் கார்டனில் நடைபெற்றது. படத்தின் தலைப்பைப் பார்த்து அடல்ட் படம் என்று நினைத்துவிடக் கூடாது. இது எல்லோருக்கும் பிடிக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon