மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை நீட்டிப்பு!

சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை நீட்டிப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது, 2007ஆம் ஆண்டில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுவதற்கு, அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் இருந்து முறைகேடான வழியில் அனுமதி பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக, அவர்கள் இருவர் மீதும் சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் சிதம்பரம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கைது செய்யாமல் விசாரிக்குமாறு முன்ஜாமீன் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஜூலை மாதம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 1 வரையும், அதன் பின்னர் செப்டம்பர் 28 வரையும் சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த மனு மீண்டும் நேற்று (செப்டம்பர் 28) விசாரணைக்கு வந்த நிலையில்,சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 25ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon