மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஈரானுக்கு ஆதரவளிக்கும் இந்தியா!

ஈரானுக்கு ஆதரவளிக்கும் இந்தியா!

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குவதற்கும், இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்வதற்கும் இந்தியா தயாராக இருப்பதாக ஈரான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு வரிகளை உயர்த்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. உலகளவில் எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக ஈரான் உள்ளது. நவம்பர் 4ஆம் தேதி முதல் விதிக்கப்படவுள்ள இந்த வரிகளால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுக் கூட்டத்தின்போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரான முகமது ஜாவத் சரிஃப் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு முகமது ஜாவத் சரிஃப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்வது குறித்து இந்தியா உறுதியளித்திருக்கிறதா என அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முகமது ஜாவத் சரிஃப், “பொருளாதார ஒத்துழைப்பையும், எண்ணெய் இறக்குமதியையும் தொடர்வதற்கு எங்களது இந்திய நண்பர்கள் எப்போதுமே உறுதியுடன் இருந்துள்ளனர். இதே பதிலைத்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் என்னிடம் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon