மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: பூச்சிக்கொல்லிகளுக்கு மரணம் எப்போது?

சிறப்புக் கட்டுரை: பூச்சிக்கொல்லிகளுக்கு மரணம் எப்போது?

லியா உத்யஷேவா

மிகவும் அபாயகரமான பூச்சிக்கொல்லிகள் நமது உடல் நலம், சுற்றுச்சூழல், உணவு மற்றும் நீர் போன்றவற்றை மாசுபடுத்துவதோடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு 1,10,000 தற்கொலை மரணங்கள் நிகழ்வதற்கான பெரிய நஞ்சாகவும் இருக்கிறது.

உலகம் முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு தற்கொலை செய்துகொள்ளும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் ஒவ்வொரு 40 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதில் 15 முதல் 20 விழுக்காட்டினர் பூச்சிக்கொல்லி மருந்துகளைக் குடித்தே தற்கொலை செய்து கொள்கின்றனர். 1990 முதல் 2007 வரையிலான 17 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 30 விழுக்காட்டினர் பூச்சிக்கொல்லிகளைக் குடித்தே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆட்களின் எண்ணிக்கையில் பார்த்தால் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் வரையில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தித் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது எல்லா வகையான தற்கொலைகளும் 38.5 விழுக்காடாகக் குறைந்துள்ளன. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 92,000 பேர் பூச்சிக்கொல்லிகளைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சிறு விவசாயிகளும் மிக அதிகளவிலான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். உற்பத்தியை அதிகரிப்பதற்காக உரங்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக இந்தியாவில் மிகவும் அபாயகரமான பூச்சிக்கொல்லிகள் மிக எளிமையாகக் கிடைக்கின்றன. இதுதான் நெருக்கடியான சூழலில் பூச்சிக்கொல்லிகளைக் குடித்து தற்கொலை செய்துகொள்வதற்கான எளிமையான தேர்வாக உள்ளது. இதையே வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டால், விவசாயத்துக்குப் பயன்படும் வலிமையான பூச்சிக்கொல்லிகள் யாவும் உரிமம் பெற்ற வேளாண் பணியாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

குறைந்த நச்சுத்தன்மை கொண்ட மருந்துகளைத் தற்கொலை செய்துகொள்வதற்குப் பயன்படுத்தும் மேற்கு நாடுகளைப் போலல்லாமல் இங்கு மிகவும் அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அதனால்தான் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தித் தற்கொலை செய்து மரணிப்பவர்களின் எண்ணிக்கை தொழில்மயமான நாடுகளைக் காட்டிலும் வேளாண் மயமாகவுள்ள நாடுகளில் மிக அதிகமாக உள்ளது.

பூச்சிக்கொல்லிகளைக் குடித்துத் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்று கருதுபவர்கள், அவர்கள் தங்களது தற்கொலைக்கான முடிவை 10 நிமிடங்களுக்குள்ளாகவே சிந்தித்து விடுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் தற்கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெரும்பாலான நபர்கள் இறக்க விரும்பவில்லை. அவர்கள் உளவியல் ரீதியான மன அழுத்தங்களாலேயே இந்த முடிவை எடுக்கின்றனர். அதிக ஆபத்தான முறைகளை ஒரு நபர் தற்கொலைக்காகப் பயன்படுத்துவதைத் தடுத்தால், ஒருவேளை இறப்புகளைக் குறைக்கவும் இயலும். அதோடு அவர்கள் கூடுதலான காலம் வாழவும் வழிவகுக்கும் அல்லது அத்துடன் தற்கொலைக்கான தூண்டுதல் அவர்களை விட்டு அகலவும் வாய்ப்பிருக்கிறது.

தற்கொலைக்கு முயற்சி செய்த காலத்தில் அவர்கள் தொடர்ந்து உயிரோடு இருந்தால் அவர்கள் தங்களுடைய குடும்பத்தையும், சமூகத்தையும் புரிந்துகொள்ள உதவும். அந்த நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவம் மற்றும் உளவியல் சார்ந்த சேவைகள் அவர்களின் மன அழுத்தங்களைப் போக்க உதவும்.

பூச்சிக்கொல்லி தொடர்பான தற்கொலைகளைத் தடுக்கும் கொள்கை முயற்சிகள்

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பூச்சிக்கொல்லிகள் தொடர்பான தற்கொலை தடுப்புக்கான (சி.பி.எஸ்.பி.) ஆராய்ச்சி மற்றும் கொள்கை முன்முயற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பூச்சிக்கொல்லிகள் குடித்து தற்கொலை செய்வது குறித்த பிரச்சினைக்குத் தீர்வுகாண நாங்கள் முயற்சித்து வருகிறோம். இந்த மையம் 2017ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. உலகம் முழுவதும் நடக்கும் பூச்சிகொல்லி தொடர்பான தற்கொலைகளைக் கணிசமான எண்ணிக்கையில் கட்டுப்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

இந்தியாவில் மிகவும் அபாயகரமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதே அதிகளவிலான இவ்வகைத் தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளது என்பதை சி.பி.எஸ்.பி. கண்டறிந்துள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள் உட்கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பூச்சிக்கொல்லித் தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது கிராமப்புற இந்தியாவில் உள்ள 22 மருத்துவமனைகளில் இந்தப் பணி நடைபெறுகிறது. இந்தத் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு இந்திய பூச்சிக்கொல்லி ஒழுங்குமுறை அமைப்பாளர்களுக்கு அளிக்கப்படும். இது உறுதியான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவும்.

அண்மையில் இந்தியாவில் 12 பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. 6 வேதியியல் ரசாயனங்கள் பூச்சிக்கொல்லிகளிலிருந்து நீக்கப்பட்டன. இது சி.பி.எஸ்.பி. ஆய்வின் இலக்குகளில் ஒன்றாகும். குறிப்பாக மெத்தைல் பாரதின், போரேட், பாஸ்போமிடான், டிச்லோர்வ்ஸ் (நாடாப்புழு நீக்க மருந்து) போன்ற பூச்சிக்கொல்லிகள்தான் இந்தியாவில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மரணங்களுக்குக் காரணமாக உள்ளன. இவற்றுக்குத் தற்போது தடை விதித்திருப்பதே மிகத் தாமதமான முடிவு. சுற்றுச்சூழலையும், உடல் நலத்தையும் பாதிக்கக்கூடிய மற்ற அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை இந்தியாவில் வேளாண்மைக்குப் பயன்படுத்துவது இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அனுபம் வர்மா கமிட்டி மோனோகுரோட்டோபாஸ், கார்போஃபுரான், டைமீதோயேட் மற்றும் குயினல்போஸ் போன்ற அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளைக் கிராமப்புற ஏழை வேளாண் குழுக்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் அனுமதிக்கப் பரிந்துரைத்துள்ளது. மிகவும் அபாயகரமான இந்தப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக ஒரு விரிவான பதிலை அரசாங்கம் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சர்வதேச அளவில் பூச்சிக்கொல்லிகளால் மேற்கொள்ளப்படும் தற்கொலைகளைக் குறைக்க அதீத பயனுள்ள அணுகுமுறையைக் கையாளவும், அதற்கான கட்டுப்பாடுகளை உருவாக்கவும் சி.பி.எஸ்.பி. முனைந்துள்ளது. குறைந்த நச்சுத்தன்மை கொண்ட எரிவாயு இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தற்கொலைகள் குறைந்துள்ளன. ஆசியாவின் மற்ற நாடுகளில் வேளாண் துறையில் மிகுந்த அபாயகரமான பூச்சிக்கொல்லிகள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் இத்தகைய தற்கொலைகள் குறைந்து வருகின்றன. இத்தகைய அபாயகரமான பூச்சிக்கொல்லிகள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதிப்பதால் மட்டுமே தற்கொலைகள் முற்றிலுமாக ஒழிந்துவிடாது. ஆனால் தற்கொலை முயற்சிகளால் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கையில் இது மிகப்பெரிய வீழ்ச்சியை உண்டாக்கும்.

இதற்குச் சிறந்த உதாரணம் இலங்கையிலிருந்து கிடைக்கிறது. 1960களுக்குப் பிறகுதான் இலங்கையில் அதிக அபாயகரமான பூச்சிக்கொல்லிகள் வேளாண் பயன்பாட்டுக்கு வந்தன. அப்போது இலங்கையில் தற்கொலை விகிதம் 1 லட்சத்துக்கு 5 ஆக இருந்தது. ஆனால் 1995ஆம் ஆண்டில் தற்கொலை விகிதம் 1 லட்சத்துக்கு 57 ஆக அதிகரித்துவிட்டது. 1984ஆம் ஆண்டில் பாரதின், மீத்தைல் பாரதின் பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அனைத்து உலக சுகாதார அமைப்பு கிளாஸ் 1 நச்சுத்தன்மைக் கொண்ட பூச்சிக்கொல்லிகள் பட்டியலில் 1995ஆம் ஆண்டு அந்த இரண்டு பூச்சிக்கொல்லிகளையும் சேர்த்தது. அதன்பிறகு பூச்சிக்கொல்லிகளால் நிகழும் தற்கொலைகள் இலங்கையில் குறையத் தொடங்கின.

அதன்பிறகு எண்டோசல்ஃபான் 1998ஆம் ஆண்டிலும், டைமீதோயேட், ஃபெந்தியோன் மற்றும் பாராகுவாட் ஆகியவற்றை 2008 முதல் 2011 வரையிலான காலங்களிலும் அதிக நச்சுத்தன்மை கொண்ட கிளாஸ் 2 பூச்சிக்கொல்லிகளாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. பின்னர் இந்தப் பூச்சிக்கொல்லிகளும் தடை செய்யப்பட்டன. ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் தற்போது ஒரு லட்சத்துக்கு 17 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் தற்கொலை விகிதம் 70 விழுக்காடு குறைந்துள்ளது. தொடர்ந்து குறைந்தும் வருகிறது.

இந்தியாவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி நடந்த தற்கொலைகள் தொடர்பான தரவுகள் மிகச் சொற்பமாகவே உள்ளன. இதனால் இதுபற்றிய ஆய்வை நடத்துவது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. அத்தகைய அமைப்பை இங்கு உருவாக்க வேண்டும். அத்துடன் தற்போது பயன்பாட்டில் உள்ள மிக அபாயகரமான பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்வதற்கான மதிப்பாய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்:

லியா உத்யசேவா, இங்கிலாந்தில் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் பூச்சிக்கொல்லித் தடுப்பு மையத்தின் கொள்கை இயக்குநர்

நன்றி: டவுன் டூ எர்த்

தமிழில்: பிரகாசு

நேற்றைய கட்டுரை: சுற்றுலாவில் இன்றைய இளைஞர்களின் ஆர்வம்!

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon