மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பிக் பாஸைக் கலக்க வரும் தபு

பிக் பாஸைக் கலக்க வரும் தபு

பிக் பாஸுக்குள் என்ட்ரி ஆகவுள்ளார் நடிகை தபு.

நடிகர் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழானாலும் சரி இந்தியானாலும் சரி இந்த நிகழ்ச்சியை தங்களின் படங்களுக்கான விளம்பரத் தளமாகவும் சிலர் நன்கு பயன்படுத்தி வருகின்றனர் என்னும் விஷயம் கண்கூடு.

அந்தவகையில் அனுஷ்கா சர்மாவும்,வருண் தவனும் இணைந்து நடிக்கும் சூயி தாகா படம் வெளியாவதையொட்டி நடிகர் வருண் தவன் இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது போட்டியாளர்களுக்கு சூயி தாகா சேலஞ்சும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை தபுவும் தற்போது வீக் எண்ட் ஸ்பெஷலாக பிக் பாஸ் செட்டுக்குள் நுழையவிருக்கிறார். ராதிகா ஆப்தேவுடன் இணைந்து தான் நடிக்கும் அந்தாதன் என்னும் படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாவதால் அதை விளம்பரப்படுத்தும் விதமாகவே கலந்துகொள்கிறார் தபு.

கடைசியாக ஜெய் ஹோ எனும் படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்திருந்த தபு அதன் பின்னர் பாரத் என்னும் படத்தில்தான் தற்போது அவருக்கு சகோதரியாக நடித்துவருகிறார். இந்தப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே இருவரையும் இணைத்துப் பார்க்கிற வாய்ப்பு பிக் பாஸ் வாயிலாக ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon