மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

48 மணி நேரம்: கடைக்கு அவகாசம்!

48 மணி நேரம்: கடைக்கு அவகாசம்!

கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் இருந்த கடையை 48 மணி நேரத்தில் காலி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் குணா என்பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கட்டடத்திற்கு நாளொன்றுக்கு 2,000 ரூபாய் வாடகை செலுத்தி வந்துள்ளார். 2012ஆம் ஆண்டு வாடகையை 4,500 ரூபாயாக உயர்த்தி இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.

ஆனால், கூடுதல் தொகையைக் குணா செலுத்தாததால், கடையைக் காலி செய்ய இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் குணா.

இந்த வழக்கை நேற்று (செப்டம்பர் 28) விசாரணை செய்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மூன்று மாதத்தில் சம்பந்தப்பட்ட இடத்தைக் காலி செய்வதாக மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. “அதன்படி மனுதாரர் செயல்படவில்லை. கோயில் வளாகத்தில் உள்ள அந்த கடையை 48 மணி நேரத்தில் காலி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள தொகை ரூ.69 லட்சத்து 41 ஆயிரத்தை நான்கு வாரங்களில் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். தவறினால், அத்தொகையை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon