மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… - 4

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… - 4

சேது ராமலிங்கம்

இந்துத்துவம் இந்திய வடிவிலான பாசிசம்!

சில ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த வியாபாரியை நான் பார்த்து சாதாரணமாக உரையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அவர்கள் அந்நியர்கள் என்று குறிப்பிட்டார் அவர்களை வேரோடு கருவறுக்க வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டார். அந்தப் பேச்சு அதி்ர்ச்சியாக இருந்தது.

அவர் 2010இல்தான் அறிமுகமானார். ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அவர் பழைய டயர்களை வாங்கி விற்பவர். குடும்ப வறுமையின் காரணமாகப் படிக்கவில்லை. அதனால் கையெழுத்து போடக்கூடத் தெரியாது .டயர் வியாபாரத்தை வைத்து ஒரளவுக்கு நடுத்தர வர்க்க அந்தஸ்துக்கு வந்துவிட்டார். தனக்கு எழுதப் படிக்க தெரியாது என்பதை மறைத்து நடுத்தர வர்க்கத்திற்கேகுரிய கௌரவத்துடன், அனைவருடன் எந்த பேதமுமின்றி பழகுவார். அவரிடம் சில ஆண்டுகளுக்குள்ளேயே இந்தத் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏன் அவ்வளவு வெறுப்புக் காட்ட வேண்டும் இத்தனைக்கும் அவர் வெளியாட்கள் எனக்குறிப்பிடும் அவர்களுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வெறுப்பை யார் உருவாக்கியது?

பாசிஸ்ட்டின் உளவியல் கட்டமைப்பு

இதற்கான பதில் 1990களில் உளவியல் பகுப்பாய்வாளர் (Psychoanalyst) அஷிஸ் நந்தி நநேரந்திர மோடியிடம் மேற்கொண்ட நேர்காணலில் உள்ளது. நேர்காணல் மேற்கொண்டவர் ஒரு உளவியல் பகுப்பாய்வாளர் என்பதால் மோடியிடம் அடிக்கடி வெளிப்பட்ட உயர்ந்த அளவிலான அகங்காரப் பண்பு, உடும்புப்பிடியான தூய்மைவாதம், வன்முறைக்கு ஏங்கும் மனோபாவம் ஆகியன காணப்பட்டதாகவும் இதன் மூலம் அவர் எந்தக் கொடூரச் செயலையும் செய்யும் பாசிஸ்ட்டுக்கான சிறந்த உதாரணமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பத்தாண்டுகளில், அதாவது 2002இல் குஜராத்தில் மோடி முதல்வராக பதவி வகிக்கும்போது, முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் நடத்தப்பட்டன. அந்தப் படுகொலைகள் குறித்து நீங்கள் மன்னிப்பு கேட்க மாட்டீர்களா என்ற ஒரு நேர்காணலில் கேட்ட கேள்விக்கு மோடி அளித்த பதில், காரில் போகும்போது ஒரு நாய் குறுக்கே வந்து விழுந்து செத்தால் அதற்காக மன்னிப்பு கேட்க முடியுமா என்றார். நாடே அதிர்ச்சியானது.

அப்போது வெறுப்பரசியல் பேசிய மோடி, பிரதமரானதற்கு பின்னர் அப்படிப் பேசுவதில்லை ஆனால் மோடியின் அமைச்சர்களும் பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர்களும் பேசுகிறார்கள். இந்த வெறுப்பரசியல்தான் இந்துத்துவ அரசியல். அதாவது இந்து்ததுவாதான் இந்திய வடிவிலான பாசிசமாகும் என்று சுமித் சர்க்கார், ராம் புனியானி ரொமிலா தாப்பர் போன்றோர் குறிப்பிடுகின்றனர். இந்துத்துவ பாசிசத்தின் வரலாறு, அதன் லட்சியம் ஆகியவற்றை அறியாமல் நமது நாடு எதிர் கொண்டிருக்கும் அபாயத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

இந்து ராஷ்டிர லட்சியம்

1925இல் டாக்டர் ஹெட்கேவார் என்பவரால் உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) இந்து ராஷ்டிரம் அமைப்பதைத் தனது இறுதி லட்சியமாகக் கொண்டு செயல்படுத்திவருகிறது. இந்து ராஷ்டிரம் என்பது இந்துக்களை மையமாகக் கொண்ட அகண்ட பாரதமாகும். அதாவது முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் தத்தம் அடையாளத்துடன் அந்த ராஷ்டிரத்தில் இருக்க முடியாது அப்படி அவர்கள் இருந்தாலும் இந்து மதத்தை / இந்து தேசிய அடையாளத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் முதலான சிறுபான்மையினர் இல்லாத இந்தியாவை உருவாக்க அவர்கள் மீது வெறுப்பை உருவாக்க வேண்டும். அதற்காக அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும் இந்து மதத்திற்கு எதிரானவா்களாகவும் இந்துக் கோயில்களை இடித்தவர்களாகவும் வரலாற்றைத் திரிக்க வேண்டும்.அவர்களின் பண்பாட்டையும் வாழ்முறையையும் இந்துக்களுக்கு எதிரானதாகச் சித்தரித்து அதை மக்களின் உளவியலாகக் கட்டமைக்க வேண்டும். இந்த இந்துத்துவ அரசியலுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வெறுப்பரசியலைக் கொஞ்சம் கொஞ்சமாக நடுத்தர மக்கள் உள்வாங்கிவருகின்றனர் என்பதுதான் மிகவும் அபாயகரமானதாகும். அப்படி பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரைத்தான் மேலே கண்டோம்.

இந்து ராஷ்டிரத்தில் யார் இருக்க முடியும்?

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான எம்.எஸ். கோல்வல்கர் எழுதிய சிந்தனைக்கொத்து என்ற நூலில் இந்து ராஷ்டிரம் குறித்து அவர் விளக்குகிறார். மெக்சிகோவிலிருந்து ஜப்பான் வரை அகண்ட பாரதமாக இருந்த இந்துஸ்தானம் (இதில் பல்வேறு ஆசிய நாடுகளும் அடங்கும்) பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொடி கட்டி பறந்தது. அகண்ட பாரதத்திற்குள் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் வந்த பின்னர்தான் இந்துக்கள் கண்ணீர் சிந்தத் தொடங்கினர். படையெடுப்பின் மூலம் இந்துக்களை வெற்றி கண்ட முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் இந்து ராஷ்டிரத்தைச் சீர்குலைத்தனர். இந்து ராஷ்டிரத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்குத் தடையாக உள்நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள்தான் இந்து ராஷ்டிரத்திற்கு எதிரிகள்.

இந்து தேசியம்தான் தேசத்தை ஒருங்கிணைக்க முடியும். மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை ஏற்றுக்கொண்டு அதில் ஒருங்கிணைவதுதான். அதனை எதிர்ப்பது மதவாதமாகும். நீங்கள் எந்த மத நம்பிக்கையையும் பின்பற்றலாம். ஆனால் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டு பாரத தேசத்தவராக இருக்க வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இந்து ராஷ்டிரத்தில் இருக்க முடியாது.

இவ்வாறு குறிப்பிடும் கோல்வல்கர் சாத்வீகமான முறையில் இந்து ராஷ்டிரத்தின் கொடூரமான முகத்தை மறைக்கிறார். ஆர்எஸ்எஸ்ஸின் தீவிரமான மதவாதக் கொள்கையின் விளைவாக அது பிரிட்டிஷாரிடம் சரணாகதிக் கொள்கையை கடைப்பிடிக்க வைத்தது என்கிறார் வரலாற்று அறிஞரான ஏஜி.நுாரணி. அவர் கூறுகிறார்,

பிரிட்டிஷாரிடம் சரணாகதி

ஆர்எஸ்எஸ் பிறந்ததிலிருந்தே இந்திய தேசிய சுதந்திர இயக்கத்திற்கு எந்தப் பங்கையும் ஆற்றவில்லை அதற்கு மாறாக, பிரிட்டிஷாருடன் கூட்டாளியாகச் செயல்பட்டது. இந்த இயக்கத்துடன் அப்போதைய கூட்டாளியாக இருந்த இந்து மகாசபை தேசிய சுதந்திர இயக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தது. ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தாந்தவாதியான வீர சாவார்க்கா் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் விடுதலையை வேண்டி பிரிட்டிஷ் வைஸ்வராய்க்கு நான்கு கருணை மனுக்களை எழுதினார். இந்தக் கடிதங்களில் தனக்கு விடுதலை அளித்தால் பிரிட்டிஷ் பேரரசுக்கு விசுவாசமாக இருப்பதாக வேண்டினார். அதனடிப்படையி்ல் அவர் பிரிட்டிஷாரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு விடுதலை செய்யப்பட்டார். பின்னர், அவர்கள் அளித்த சிறு ஊக்கத் தொகையைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்துவந்தார்.

இன்னொரு இந்து மகாசபைத் தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷாருடன் கூட்டாளியாகச் செயல்பட்டார். பிரிட்டிஷாருக்கு எதிராக மாபெரும் எழுச்சிகள் நடந்துகொண்டிருந்தபோது ஆர்எஸ்எஸ் ஒதுங்கியே இருந்தது. காந்தி கொலை தொடர்பான சந்தேக நிழல் ஆர்எஸ்எஸ் மீது அழுத்தமாக விழுந்ததால் நேரு காலத்தில் அது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தடை நீக்கம் செய்யப்பட்டு வெளியே செயல்படத் தொடங்கிய பின்னரும் அது தேசத்தைக் கட்டியமைப்பதி எந்த ஆக்கபூர்வமான பணியையும் மேற்கொள்ளவில்லை. மத அடிப்படையிலான பண்பாட்டு அரசியலை ஆவேசமாக முன்னெடுப்பதையே அது முதன்மைப் பணியாகச் செய்துவருகிறது.

இந்துமயமான குறியீடுகள் மூலம் தேச வரலாறு, அடையாளம் ஆகியவற்றைக் கட்டமைத்தல், மத அடிப்படையிலான வெறுப்பரசியலை முன்னெடுத்தல், மத அடையாளம் கொண்ட வெகுஜன இயக்கங்களை நடத்துதல், அதன் விளைவான மதக்கலவரங்கள் ஆகியவையே ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு என அதன் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒருபுறம் சிறுபான்மையினர் மனதில் அச்சத்தை விளைவித்தல், மறுபுறம் சிறுபான்மையினரைத் தேசத்தின் எதிரிகளாகக் கட்டமைத்து அதன் மூலம் பெரும்பான்மையினரை ஒன்றிணைத்தல். இதுவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டம். அது பற்றி நாளை விரிவாகப் பார்ப்போம்.

தொடரின் முதல் பகுதி

தொடரின் இரண்டாம் பகுதி

தொடரின் மூன்றாம் பகுதி

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon