மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தென்மாவட்டங்களில் மழை!

தென்மாவட்டங்களில் மழை!

வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம்.

இது குறித்து, நேற்று (செப்டம்பர் 28) சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“அரபிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக இலங்கைக் கடற்கரை வரை வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதனாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் தென்மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பெருமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது சென்னை வானிலை மையம். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 13 செ.மீ., கரூர் மாவட்டம் பஞ்சம்பட்டியில் 10 செ.மீ., காரைக்காலில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon