மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

காதல்: கடலா, துளியா?

காதல்: கடலா, துளியா?

விஷ்ணு விஷால் நடிக்கும் ராட்சசன் படத்திலிருந்து லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'முண்டாசுப்பட்டி'யைத் தொடர்ந்து அதே கூட்டணி தற்போது 'ராட்சசன்' என்னும் படத்தில் இணைந்துள்ளது. நடிகை அமலாபால் கதாநாயகியாக நடிக்கும் நிலையில் முண்டாசுப் பட்டி படத்தில் நடித்துக் கவனம் ஈர்த்த காளி வெங்கட் மற்றும் ராமதாஸ் ஆகிய இருவரும் இந்தப் படத்திலும் நடித்துவருகின்றனர்.

விஷ்ணு பொதுவாக நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் என்னும் காரணத்தால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் படத்திலிருந்து ஒரு லிரிக்கல் வீடியோ பாடல் நேற்று (செப்டம்பர் 28) இணையத்தில் வெளியாகி உள்ளது.

'காதல் கடல் தானா' எனத் தொடங்கும் அப்பாடலை உமாதேவி எழுதியுள்ளார். சத்ய பிரகாஷ் மற்றும் சைத்ரா அம்படிபுடி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, பி.வி.சங்கர் அதனை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். காதலர்களுக்கு இடையேயான காதலை கவித்துவமாக விவரிப்பதாக அமைந்துள்ள இந்தப் பாடலை ரசிகர்கள் தற்போது முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon